ஆன்லைன் வகுப்புக்கான வழிகாட்டு நெறிகளை வெளியிட தமிழக அரசுக்கு கால அவகாசம் வழங்கி உயர்நீதிமன்றம் உத்தரவு! - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Monday, July 27, 2020

ஆன்லைன் வகுப்புக்கான வழிகாட்டு நெறிகளை வெளியிட தமிழக அரசுக்கு கால அவகாசம் வழங்கி உயர்நீதிமன்றம் உத்தரவு!

ஆன்லைன் வகுப்புக்கான வழிகாட்டு நெறிகளை வெளியிட தமிழக அரசுக்கு கால அவகாசம் வழங்கி உயர்நீதிமன்றம் உத்தரவு!
ஆன்லைன் வகுப்புக்கான வழிகாட்டு நெறிகளை வெளியிட திங்கள் வரை தமிழக அரசுக்கு கால அவகாசம் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  

ஆன்லைன் மூலம் வகுப்புக்களில் கலந்து கொள்ள மாணவ, மாணவியர் முயற்சிக்கும் போது ஆபாச இணைய தளங்கள் வருவதாகவும் எனவே ஆன்லைன் வகுப்புக்களுக்கு தடை விதிக்கக் கோரி,சரண்யா என்பவரும், ஆன்லைன் வகுப்புக்களை மொபைல் மூலமும், லேப்டாப் மூலமும் பார்ப்பதால் மாணவர்களின் கண்களுக்கு பாதிப்பு ஏற்படுவதாக கூறி,1 ம் வகுப்பு முதல் 5 ம் வகுப்பு வரை ஆன்லைன் வகுப்புக்கள் நடத்த தடை விதிக்க வேண்டும் எனவும், 

6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு 2 மணி நேரம் மட்டும் வகுப்புக்கள் நடத்த உத்தரவிட வேண்டும் என கோரி விமல் மோகன் என்பவரும் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கு முன்னதாக விசாரணைக்கு வந்தபோது, எல்.கே.ஜி மற்றும் யூ.கே.ஜி படிக்கும் குழந்தைகளுக்கு 30 நிமிடங்கள் மட்டுமே ஆன்லைன் வகுப்புகள் நடத்த வேண்டும்.

அதேபோல், 1ம் வகுப்பு முதல் 8 ம் வகுப்பு வரை தலா 45 நிமிடங்கள் என 2 ஆன்லைன் வகுப்பு மட்டுமே நடத்த வேண்டும் என்றும் 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 45 நிமிடங்களுக்கு மிகாமல் 4 வகுப்புகள் நடத்தலாம் என நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்திருந்தது. 

இந்நிலையில், இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் எம்எம் சுந்தரேஷ் நீதிபதி ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு  மீண்டும் விசாரணைக்கு வந்தது அப்போது நீதிபதிகள் மத்திய அரசினுடைய பரிந்துரைகளின்படி தமிழக அரசு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளதா? என கேள்வி எழுப்பினர். 

அப்போது கல்வித்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் முனுசாமி, வருகிற திங்கட்கிழமை(ஆகஸ்டு 3) வரை கால அவகாசம் வேண்டும் என்றும் அதற்குள் ஆன்லைன் வகுப்புகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்படும் என்றும் தெரிவித்தார். 

இதையடுத்து வழக்கு விசாரணையை திங்கட்கிழமைக்கு ஒத்திவைத்த நீதிபதிகள் அன்று வழிகாட்டு நெறிமுறைகளை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளனர்.

No comments:

Post a Comment