குரூப்-1ல் தேர்ச்சி பெற்ற 90 டிஎஸ்பிகளுக்கு பணி நியமன ஆணை - Minnal Kalvi Seithi

Breaking

Monday, July 27, 2020

குரூப்-1ல் தேர்ச்சி பெற்ற 90 டிஎஸ்பிகளுக்கு பணி நியமன ஆணை

குரூப்-1ல் தேர்ச்சி பெற்ற 90 டிஎஸ்பிகளுக்கு பணி நியமன ஆணை
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (குரூப்-1) மூலமாக காவல் துணை கண்காணிப்பாளர் பணியிடங்களுக்கு தெரிவு செய்யப்பட்ட 90 நபர்களுக்கு பணிநியமன ஆணைகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று தலைமை செயலகத்தில் நடைபெற்றது.

 முதல்வர் எடப்பாடி பழனிசாமி, 90 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக 14 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கினார். மேலும், தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறையில், மாவட்ட அலுவலர் பணியிடங்களுக்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (குரூப்-1) மூலமாக தெரிவு செய்யப்பட்ட 3 நபர்களுக்கும் பணிநியமன ஆணைகளை வழங்கினார். 

இந்நிகழ்ச்சியில், தலைமைச் செயலாளர் சண்முகம், உள்துறைச் செயலாளர் எஸ்.கே.பிரபாகர், டிஜிபி திரிபாதி, டிஜிபி சைலேந்திர பாபு பங்கேற்றனர்.

No comments:

Post a Comment