பிளஸ் 2 மறுதேர்வு முடிந்தது விடைத்தாள் இன்றே திருத்தம் - Minnal Kalvi Seithi

Breaking

Monday, July 27, 2020

பிளஸ் 2 மறுதேர்வு முடிந்தது விடைத்தாள் இன்றே திருத்தம்

பிளஸ் 2 மறுதேர்வு முடிந்தது விடைத்தாள் இன்றே திருத்தம்
பிளஸ் 2வில், ஒரு பாடத்துக்கான மறுதேர்வு நேற்று முடிந்தது. விடைத்தாள் திருத்தம் இன்று நடைபெறுகிறது.

தமிழக பள்ளி கல்வி பாட திட்டத்தில், பிளஸ் 2 மாணவர்களுக்கு, மார்ச், 24ல் பொதுத் தேர்வுகள் முடிந்தன. மார்ச் 24ல், ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால், அன்றைய தினம் நடந்த கடைசி தேர்வில், சிலர் பங்கேற்கவில்லை.

அனுமதி

இது குறித்து, பள்ளி கல்வித்துறை சார்பில் பட்டியல் எடுக்கப்பட்டது. அதில், 37 ஆயிரம் மாணவ - மாணவியர் தேர்வுக்கு வராதது தெரிய வந்தது. அவர்களில், மறுதேர்வு எழுத விருப்பம் தெரிவித்தவர்களிடம் விண்ணப்பம் பெறப்பட்டது.

இதன்படி, நேற்று மறுதேர்வு நடத்தப்பட்டது. தமிழகம் முழுதும், 290 மையங்கள் ஒதுக்கப்பட்டன. அவற்றில், 175 பள்ளி மாணவர்கள் மற்றும் 671 தனித்தேர்வர்கள் என, மொத்தம், 846 பேருக்கு அனுமதி வழங்கப்பட்டது. 

அவர்களில், 147 மாணவர்கள், 372 தனித்தேர்வர்கள் என, மொத்தம், 519 பேர் பங்கேற்றனர். விதிமுறைகள்மாணவர்கள் அனைவரும் முக கவசம் அணிந்தும், சமூக இடைவெளியை பின்பற்றியும், தேர்வு எழுத அனுமதிக்கப் பட்டனர். 

தேர்வு எழுதும் முன், கிருமி நாசினி பயன்படுத்தியும், கைகளை சோப்பால் கழுவியும், கொரோனா தடுப்பு விதிமுறைகள் பின்பற்றப்பட்டன.

இந்த தேர்வுக்கான விடைத்தாள்கள், இன்றே திருத்தம் செய்யப்படுகின்றன. அந்தந்த பள்ளிகளிலேயே விடைத்தாள் திருத்தப்பட்டு, மதிப்பெண்களை தேர்வு துறைக்கு அனுப்ப, தேர்வுத்துறை இயக்குனர், பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். அரசின் ஒப்புதல் பெற்று, விரைவில் தேர்வு முடிவும் வெளியிடப்பட உள்ளது

No comments:

Post a Comment