கல்லூரி சேர்க்கை: ஆன்லைன் பதிவில் சிக்கல் - Minnal Kalvi Seithi

Breaking

Monday, July 27, 2020

கல்லூரி சேர்க்கை: ஆன்லைன் பதிவில் சிக்கல்

கல்லூரி சேர்க்கை: ஆன்லைன் பதிவில் சிக்கல்
அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில், பட்டப்படிப்பில் சேருவதற்கான, 'ஆன்லைன்' விண்ணப்ப பதிவில், அறிவியல் பிரிவுக்கு பதிவு செய்ய, தொழில்நுட்ப வசதி செய்ய வேண்டும் என்ற, கோரிக்கை எழுந்துள்ளது.

அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில், மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப பதிவு, இந்த ஆண்டு முதல், ஆன்லைனுக்கு மாற்றப்பட்டுள்ளது. ஜூலை, 20 முதல் ஆன்லைன் பதிவு துவங்கியது. 

உயர்கல்வி துறையின், www.tngasa.in மற்றும் www.tndceonline.org என்ற, இணைய தளங்களில் மாணவர்கள் பதிவு செய்து வருகின்றனர்.இதில், மாணவர்கள் விண்ணப்பிக்கும் போது, கலை, அறிவியல் படிப்புகளுக்கு மட்டுமே, ஆன்லைனில் பதிவு செய்ய முடிகிறது. அறிவியல் பாடப்பிரிவுகளுக்கு பதிவு செய்ய முடியவில்லை.

இது குறித்து, மாணவர்கள் கூறியதாவது: கலை, அறிவியல் படிப்பில் சேர, ஆன்லைனில் பதிவு செய்யும் போது, பி.எஸ்சி., விஷுவல் கம்யூனிகேசன், பொருளாதாரம், பி.காம்., வணிகம் உள்ளிட்ட பாடப்பிரிவுகள் மட்டுமே தேர்வாகிறது.

கணிதம், வேதியியல், உயிர் வேதியியல், தாவரவி யல், விலங்கியல், இயற்பியல் போன்ற அறிவியல் பாடப்பிரிவுகளை தேர்வு செய்ய முடியவில்லை. அதற்கான தொழில்நுட்ப வசதிகளை மேம்படுத்த வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

No comments:

Post a Comment