ஒரே ஒரு மாணவிக்காக இயங்கிய தேர்வு மையம் - Minnal Kalvi Seithi

Breaking

Monday, July 27, 2020

ஒரே ஒரு மாணவிக்காக இயங்கிய தேர்வு மையம்

ஒரே ஒரு மாணவிக்காக இயங்கிய தேர்வு மையம்
சேலம் மாவட்டம், குஞ்சாண்டியூர் தனி தேர்வு மையத்தில், ஒரே ஒரு மாணவி மட்டுமே நேற்று தேர்வு எழுதினார்.

சேலம் மாவட்டம், மேட்டூர், குஞ்சாண்டியூர் அடுத்த வீரனுார் கிராமத்தை சேர்ந்தவர் கலையரசன், 30; மனைவி அனிதா, 23, எஸ்.எஸ்.எல்.சி., படித்து, பிளஸ் 2 தனியாக படித்தார். கடந்த மார்ச் மாதம், பிளஸ் 2 தனி தேர்வர்களுக்கான தேர்வு எழுதினார். 

கணக்கு பதிவியல் தேர்வு மார்ச், 24ல் எழுத வேண்டும். அன்று ஊரடங்கு அமலுக்கு வந்ததால், தேர்வுக்கு அனிதாவால் செல்ல முடியவில்லை. அன்று தேர்வு எழுத முடியாதவர்களுக்கு, நேற்று மறு தேர்வு நடந்தது. குஞ்சாண்டியூர் அரசு உயர்நிலைப் பள்ளியில், தனி தேர்வு மையம் அமைக்கப்பட்டது

இந்த மையத்தில், நேற்று அனிதா ஒருவர் மட்டுமே தேர்வு எழுதினார்.மையத்திற்கு முதன்மை கண்காணிப்பாளர், துறை அலுவலர், எழுத்தர் என, கல்வித் துறை சார்பில் மூன்று அலுவலர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். தேர்வு மையம் என்பதால், போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது.

No comments:

Post a Comment