கல்வி கட்டணத்தை உயர்த்த தனியார் பள்ளிகள் கோரிக்கை - Minnal Kalvi Seithi

Breaking

Monday, July 27, 2020

கல்வி கட்டணத்தை உயர்த்த தனியார் பள்ளிகள் கோரிக்கை

கல்வி கட்டணத்தை  உயர்த்த தனியார் பள்ளிகள் கோரிக்கை
கல்வி கட்டணத்தை 15 சதவீதம் உயர்த்த வேண்டும் என்று தனியார் பள்ளிகள் கோரிக்கை விடுத்துள்ளன.

தனியார் பள்ளிகள் கல்வி கட்டண நிர்ணயக் குழுவின் தலைவர் ஆர்.பாலசுப்பிரமணியனுக்கு, தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் எஸ்.ராஜா, பொதுச்செயலாளர் டி.சி.இளங்கோவன் கூட்டாக அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

நெருக்கடியாக உள்ள இந்த சூழலில் ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் ஊரடங்கின் காரணமாக வங்கிகளின் தொடர் விடுமுறையால் சம்பளப் பணத்தை நேரடியாக பள்ளிகளில் இருந்து பெற்றுக்கொண்ட காரணத்தினாலும், பள்ளிக் கட்டண நிர்ணயம் சம்பந்தமாக கோப்புகள் மற்றும் சான்றிதழ்கள் தயார் செய்வதில் பல்வேறு சிரமங்கள் ஏற்பட்டுள்ளதாலும், 

ஏற்கனவே சென்ற ஆண்டுகளில் நிர்ணயம் செய்யப்பட்ட கட்டணத்தில் இருந்து ஆண்டுக்கு 15 சதவீதம் உயர்த்தி அனைத்து தனியார் பள்ளிகளுக்கும் வருகின்ற 3 ஆண்டுகளுக்கு கட்டணம் நிர்ணயம் செய்து ஆணை வழங்குமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment