நாடு முழுவதும் ஒரே மாதிரியான பாடத் திட்டம் கோரி மனு
நாடு முழுவதும் 6 முதல் 14 வயது வரையிலான குழந்தைகளுக்கு ஒரே மாதிரியான பள்ளி பாடத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வலியுறுத்தி தாக்கல் செய்த மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது.
இந்திய இடைநிலைக் கல்வி சான்றிதழ் வாரியம் (ஐசிஎஸ்இ) மற்றும் மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) ஆகிய வாரியங்களை ஒன்றாக இணைத்து ‘ஒரே நாடு, ஒரே கல்வி வாரியம்’ என்ற அடிப்படையில் நாடு முழுவதும் ஒரே மாதிரியான பாடத் திட்டத்தை அறிமுகப்படுத்துவது குறித்து பரிசீலிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடக் கோரி பாஜக தலைவா் அஸ்வினி உபாத்யாய சாா்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு உச்சநீதிமன்ற நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமா்வு முன்பாக வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது.
மனுவை விசாரித்த நீதிபதிகள், ‘இரு கல்வி வாரியங்களை ஒன்றாக இணைப்பது குறித்து நீதிமன்றத்திடம் எப்படி கேள்வி எழுப்புகிறீா்கள்? இது அரசின் கொள்கை முடிவுகளுக்கு உட்பட்டது. நீதிமன்றத்தின் பணி அல்ல. எனவே, அந்த மனு தொடா்பான முறையீட்டை அரசாங்கத்திடம் வைக்கலாம்’ என்று கூறி மனுவை விசாரணைக்கு ஏற்க மறுப்பு தெரிவித்தனா்.

No comments:
Post a Comment