கலை மற்றும் அறிவியல் படிப்புகளில் சேருவதற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க தேதி அறிவிப்பு - Minnal Kalvi Seithi

Breaking

Thursday, July 16, 2020

கலை மற்றும் அறிவியல் படிப்புகளில் சேருவதற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க தேதி அறிவிப்பு

கலை மற்றும் அறிவியல் படிப்புகளில் சேருவதற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க தேதி அறிவிப்பு
தமிழகத்தில் கலை மற்றும் அறிவியல் படிப்புகளில் சேருவதற்கு வருகின்ற ஜூலை 20-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என உயர்க்கல்வித்துறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதில் ஜூலை 20 முதல் ஆன்லைனில் www.tngasa.in, www.tndceonline.org ஆகிய இணையதளங்களில் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு தமிழகத்தில் உள்ள 109 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் ஆன்லைன் மூலம் மாணவர் சேர்க்கை நடத்த உயர்கல்வித்துறை முடிவு செய்துள்ளது.

வழக்கமாக அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் மாணவர்கள் விண்ணப்பங்கள் பெறுவதற்கும் மாணவர் சேர்க்கைகாவும் நேரடியாக கல்லூரிகளுக்கு வருகை தருவது வழக்கம். 

இதன் காரணமாக அதிகளவு மாணவர்கள் திரள்வார்கள். கொரோனோ தொற்று காரணமாக அதிகளவு மாணவர்கள் கல்லூரிகளில் கூடுவதை தடுக்கும் வகையில் தற்போது ஆன்லைன் முறையில் மாணவர் சேர்க்கை நடத்த உயர் கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. 

No comments:

Post a Comment