12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் குறித்து கமல்ஹாசன் வெளியிட்ட ட்விட்டர் பதிவு - Minnal Kalvi Seithi

Breaking

Thursday, July 16, 2020

12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் குறித்து கமல்ஹாசன் வெளியிட்ட ட்விட்டர் பதிவு

12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் குறித்து கமல்ஹாசன் வெளியிட்ட ட்விட்டர் பதிவு
திறமைகளைத் தேர்வுகள் மட்டும் அளவிடுவதில்லை. வாழ்க்கை உங்களுக்காய் காத்திருக்கிறது என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் 11, 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. தமிழகம் முழுக்க, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 7,127 பள்ளிகளில் 2120 பள்ளிகளில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன.

அரசு பள்ளிகள் 85.94 சதவீதம் பேரும் மெட்ரிக் பள்ளிகளில் 98.70% பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். குறிப்பாக மாற்றத்திறனாளி மாணவர்களில் 2,506 பேர் தேர்ச்சி பெற்றுள்ளன.

இத்தேர்வில் திருப்பூர் மாவட்டம் முதலிடமும், ஈரோடு மாவட்டம் இரண்டாவது இடமும் கோவை மூன்றாமிடமும் பெற்றுள்ளன. கடந்த வருடமும் இதே போன்ற இடங்களை இம்மாவட்டங்கள் பிடித்தன.

இந்த நிலையில் 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் குறித்த கமல்ஹாசன் ட்விட்டர் பதிவில், ‘மாணவ கண்மணிகாள், பரீட்சைகளும், மதிப்பெண்களும் மட்டுமே உங்களின் அளவுகோல் அல்ல. 

அதிக மதிப்பெண் பெற்று மகிழ்ந்திருப்போருக்கு வாழ்த்துக்கள்.பெறாதோர் வருந்த வேண்டாம். திறமைகளை தேர்வுகள் மட்டும் அளவிடுவதில்லை. வாழ்க்கை உங்களுக்காய் காத்திருக்கிறது’ என்று குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment