'எப்பம்மா... ஸ்கூல் திறப்பாங்க!' ஏக்கத்தில், குட்டீஸ் கூட்டம் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Friday, July 17, 2020

'எப்பம்மா... ஸ்கூல் திறப்பாங்க!' ஏக்கத்தில், குட்டீஸ் கூட்டம்

'எப்பம்மா... ஸ்கூல் திறப்பாங்க!' ஏக்கத்தில், குட்டீஸ் கூட்டம்
'எப்பம்மா, ஸ்கூல் திறப்பாங்க... பிரண்ட்ைஸ பார்க்கலாம்' என்று, மாணவ கண்மணிகளின் குரல், ஒவ்வொரு வீடுகளிலும், கேட்க துவங்கியிருக்கிறது.

வழக்கமாக ஏப்., மே மாதங்களில் கோடை விடுமுறையை உற்சாகமாக கொண்டாடும் குட்டீசுக்கு, இந்தாண்டு விடுமுறை மார்ச்சிலேயே துவங்கியது. நான்காவது மாதமாக ஜூலை வரை நீடிக்கிறது.கோடை விடுமுறையில், தாத்தா, பாட்டி, மாமா, அத்தை மற்றும் உறவினர்களின் வீடுகளுக்குச் செல்வது, குட்டீசின் வழக்கம். 

ஆனால், இந்தாண்டு விடுமுறை நீண்டும், வீட்டை விட்டு எங்கும் செல்ல முடியாத ஏக்கத்துடன் குட்டீஸ் தவிக்கின்றன.புத்தகம், 'டிவி', ஸ்மார்ட் போன் என்று எப்படி எப்படியெல்லாமோ பொழுதை கழித்தாலும், தெருவில் சக குட்டீசுடன் இணைந்து விளையாடும் இனிமையை, குட்டீஸ் பெற முடியவில்லை.


மனநல மருத்துவர் ஒருவர் கூறியதாவது:

குட்டீஸ், தங்களை தொந்தரவு செய்யக்கூடாது என்பதற்காக, பெற்றோர் பலர், ஸ்மார்ட் போன், ஐபேடு, லேப்டாப் போன்றவற்றை கொடுத்து விடுகின்றனர். இதனால், பலர், இதற்கு அடிமையாகி வருகின்றனர்.ஒரு கட்டத்தில், அவர்கள் கேட்டவுடன் ஸ்மார்ட் போனை கையில் கொடுக்காவிட்டால், பெற்றோர் மீது கோபம் கொள்கின்றனர். 

கொடுக்காதபோது, வன்முறையை தீர்வாக நாடும் அளவு, குட்டீசின் மன நிலை மாறுகிறது.செஸ், பல்லாங்குழி, கில்லி, சறுக்கு மரம், நொண்டி, பாண்டி எனப் பல்வேறு விளையாட்டுகளை அவர்களுக்குப் பல பெற்றோர் சொல்லிக் கொடுத்து, அதில் ஆர்வத்தை துாண்டி வருகின்றனர். 


இது நல்லதுதான்.சினிமா பாடல்களை தவிர்த்த, சிறந்த பாடல்களை ராகத்துடன் தங்கள் குழந்தைகளுக்கு கற்றுத்தரலாம். வீட்டில் பெரியவர்கள் இருந்தால், ஆன்மிக கதைகள் போன்றவற்றை, அவர்கள் கேட்க வைக்கலாம்.

குழந்தைகளுக்கு கதையார்வம் அதிகம். கதையின் துவக்கத்தை சொல்லி, அந்தக் கதையை அவர்களாகவே தங்கள் கற்பனையில், அவர்கள் விருப்பப்படி கூற வைக்கலாம். அவ்வாறு அவர்கள் கூறும்போது, அவர்களைப் பாராட்ட வேண்டும். அப்போதுதான், அவர்களின் கற்பனைத் திறன் மேம்படும்.

 வீடியோ கேம்ஸ் போன்றவற்றில், அவர்களது மனம் திரும்பாது.நான்கு மாதங்களாக வீட்டிலேயே அடைந்து கிடப்பதால், குழந்தைகளும் ஒருவகையில் மன அழுத்தத்தால் பாதிக்கப்படுவர். அவர்களை மன அழுத்தத்துக்கு ஆளாக்காமல், அவர்களது திறனை மேம்பட வைப்பது, பெற் றோர் கையில்தான் உள்ளது.

 பக்குவமாக அவர்களை வழிநடத்தப் பழகினால், பிரச்னையே இருக்காது.வழக்கமாக, குட்டீஸ், பள்ளி விடுமுறை எப்போது என்றுதான் எதிர்பார்ப்புடன் இருப்பார்கள்.

 மாறாக, எப்போது பள்ளியை திறப்பர், நண்பர்களை பார்க்கலாம் என்று எண்ண துவங்கியிருக்கின்றனர். இது ஒருவகையில், அவர்களுக்கு கல்வி மீதான ஆர்வத்தை துாண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

No comments:

Post a Comment