புதுச்சேரியில் உயர்கல்விக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க புதிய சான்றிதழ் கட்டாயமில்லை: முதல்வர் நாராயணசாமி - Minnal Kalvi Seithi

Breaking

Wednesday, July 22, 2020

புதுச்சேரியில் உயர்கல்விக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க புதிய சான்றிதழ் கட்டாயமில்லை: முதல்வர் நாராயணசாமி

புதுச்சேரியில் உயர்கல்விக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க புதிய சான்றிதழ் கட்டாயமில்லை: முதல்வர் நாராயணசாமி
புதுச்சேரியில் கல்லூரிகளுக்கு விண்ணப்பிக்கும் போது வருவாய் நிர்வாகம் வழங்கும் சான்றிதழ் கட்டாயமில்லை என முதலமைச்சர் நாராயணசாமி அறிவித்துள்ளார்.

புதுச்சேரி மாநிலத்தில் உயர்கல்விக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் முறையானது  வரும் 5ம் தேதியோடு நிறைவடைகிறது.

இந்த நிலையில், இந்த விண்ணப்பத்தின் போது குடியுரிமை, சாதி சான்றிதழ், வருமான சான்றிதழ் உள்ளிட்டவை இணைக்கப்பட வேண்டும்.
தற்போது வருவாய் துறையினர் அனைவரும் கோவிட் - 19 பணியில் இருக்கின்ற காரணத்தினால் புதிய சான்றிதழ் வழங்குவதில் மிகுந்த சிரமம் ஏற்பட்டுள்ளது.

உயர்கல்விக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் போது, வருமான சான்றிதழ், சாதி சான்றிதழ், உள்ளிட்ட வருமானவரித்துறையினரால் பெறப்படும் எந்த சான்றிதழும் இணைக்க வேண்டிய கட்டாயமில்லை.

பழைய சான்றிதழ் இருப்பின் அதனை இணைக்க வேண்டும். ஒருமாதத்திற்கு பின்னர் இயல்பு நிலை திரும்பிய பின்பு வருவாய்த்துறை அதிகாரிகள் அலுவலக பணியில் ஈடுபடும் போது சான்றிதழ் பெற்று விண்ணப்பிக்கலாம் என்று அறிவித்தார்.

No comments:

Post a Comment