மாணவருக்கு தொற்று வந்தால் துணைவேந்தர்கள் மீது வழக்கு: அமைச்சர் எச்சரிக்கை - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Monday, July 13, 2020

மாணவருக்கு தொற்று வந்தால் துணைவேந்தர்கள் மீது வழக்கு: அமைச்சர் எச்சரிக்கை

மாணவருக்கு தொற்று வந்தால் துணைவேந்தர்கள் மீது வழக்கு: அமைச்சர் எச்சரிக்கை
மகாராஷ்டிராவில் உள்ள பல்கலைக் கழகங்களில் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. கொரோனா பரவல் மிக அதிகளவு இருப்பதால், பல்கலைக்கழக துணை வேந்தர்கள் மற்றும் குழு உறுப்பினர்களிடம் கலந்து ஆலோசித்து இம்முடிவை முதல்வர் வெளியிட்டுள்ளார். 

ஆனால், தேர்வை நடத்த யுஜிசி புதிய வழிக்காட்டுதல்களை வெளியிட இருப்பதாக தெரிவித்துள்ளது. பாஜ ஆளும் மாநிலங்களில் மட்டுமே இதற்கு வரவேற்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்றபடி மகாராஷ்டிரா உள்பட 10 மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. 

அதனால், ஈகோ பிரச்னையில் மத்திய உள்துறை அமைச்சகம் மோசமான முடிவை எடுக்கக்கூடாது.கொரோனா பரவல் அதிகளவு இருப்பதால், இத்தேர்வை நடத்தக்கூடாது என்பதில் மாநில அரசு உறுதியாக இருக்கிறது. 

இறுதியாண்டு முடிக்கும் மாணவர்களுக்கு பட்ட சான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுக்கும்படி துணை வேந்தர்கள் ஏற்கனவே கடிதம் அளித்துள்ளனர். அப்படி இருக்கையில், தற்போது யுஜிசியின் நடவடிக்கை சரியானதல்ல. 

ஒருவேளை தேர்வை யுஜிசி நடத்தினால், கொரோனா நோய் தொற்றுக்கு மாணவர்கள் உள்ளாவார்கள். 9 லட்சம் மாணவர்களை எப்படி தங்க வைத்து, அவர்களை பரிசோதித்து தேர்வுக்கு அனுப்புவீர்கள்? அவர்களுக்கு தேவையான நோய் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள பல்கலைக்கழக நிர்வாகம் பொறுப்பு ஏற்குமா? 

மாநில அரசின் உத்தரவை மீறி தேர்வு நடத்தப்படும் பட்சத்தில், எந்த மாணவருக்காவது தொற்று வந்தால், துணை வேந்தர்கள் மீது எப்ஐஆர் பதிவு செய்து வழக்கு நடவடிக்கை எடுக்கப்படும். மாணவர்களின் வாழ்க்கையில் விளையாடக் கூடாது.

இப்பிரச்னையை அந்தந்த மாநில அரசின் முடிவுக்கே விட்டுவிட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். 9 லட்சம் மாணவர்களை எப்படி தங்க வைத்து, அவர்களை பரிசோதித்து தேர்வுக்கு அனுப்புவீர்கள்? அவர்களுக்கு தேவையான நோய் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள பல்கலைக்கழக நிர்வாகம் பொறுப்பு ஏற்குமா?

No comments:

Post a Comment