இந்து தமிழ் திசை’ நாளிதழ், ‘டாப்பர்ஸ் கிளாஸ்’ இணைந்து நடத்தும் ‘கையெழுத்துப் பயிற்சி’ - ஆன்லைன் நிகழ்ச்சி செப்.10-ல் தொடங்கி 7 நாட்கள் நடைபெறும் - Minnal Kalvi Seithi

Breaking

Sunday, August 30, 2020

இந்து தமிழ் திசை’ நாளிதழ், ‘டாப்பர்ஸ் கிளாஸ்’ இணைந்து நடத்தும் ‘கையெழுத்துப் பயிற்சி’ - ஆன்லைன் நிகழ்ச்சி செப்.10-ல் தொடங்கி 7 நாட்கள் நடைபெறும்

 இந்து தமிழ் திசை’ நாளிதழ், ‘டாப்பர்ஸ் கிளாஸ்’ இணைந்து நடத்தும் ‘கையெழுத்துப் பயிற்சி’ - ஆன்லைன் நிகழ்ச்சி செப்.10-ல் தொடங்கி 7 நாட்கள் நடைபெறும்


கரோனா ஊரடங்கில் மாணவ - மாணவிகள் வீட்டிலிருந்தபடியே இணைய வழியில் பங்கேற்று பயன்பெறும் வகையில் ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ், ‘டாப்பர்ஸ் கிளாஸ்’ உடன் இணைந்து நடத்தும் ‘கையெழுத்துப் பயிற்சி’ - ஆன்லைன் நிகழ்ச்சி செப்.10-ம்தேதி தொடங்கி, 7 நாட்கள் நடை பெற உள்ளது.


ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில், அனைவருக்கும் பயன்படத்தக்க வகையில் ‘இந்து தமிழ்திசை’ நாளிதழ் பல்வேறு செயல்பாடுகளை இணையம் வழியாக முன்னெடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, ‘கையெழுத்துப் பயிற்சி’ எனும் ஆன்லைன் நிகழ்ச்சியை செப்.10 முதல் 16-ம் தேதி வரை தினமும் மாலை 4.00 முதல் 5.30 மணி வரை நடத்த உள்ளது.


இந்தப் பயிற்சியில் பங்கேற்கும் அனைவருக்கும் 100 பக்க அளவிலான பயிற்சித்தாள் தரப்பட்டு, அதன் வழியே நாள்தோறும் பயிற்சி வழங்கப்படும். பயிற்சியின்முடிவில் அனைவருக்கும் அழகானகையெழுத்து அமையும்.


இந்த கையெழுத்துப் பயிற்சியை பல ஆண்டுகள் அனுபவமிக்க புகழ்பெற்ற கையெழுத்துப் பயிற்சியாளர் சிந்துஜா புவனேஸ்வரன் வழங்க உள்ளார். 2-ம் வகுப்பு முதல் 4-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் ஜூனியர் பிரிவிலும், 5-ம் வகுப்புக்கு மேல் பயிலும் அனைத்து மாணவர்களும் சீனியர் பிரிவிலும் பங்கேற்கலாம்.


இதில் பங்கேற்க விரும்புபவர்கள் https://connect.hindutamil.in/handwriting.php என்ற இணையதளத்தில் ரூ.500 கட்டணம் செலுத்தி, பதிவு செய்துகொண்டு பங்கேற்கலாம். கூடுதல் விவரங்களுக்கு 9003966866 என்ற செல்பேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

No comments:

Post a Comment