நாளை 10ம் வகுப்பு 'ரிசல்ட்' எஸ்.எம்.எஸ்.,சில் மதிப்பெண் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Saturday, August 8, 2020

நாளை 10ம் வகுப்பு 'ரிசல்ட்' எஸ்.எம்.எஸ்.,சில் மதிப்பெண்

 நாளை 10ம் வகுப்பு 'ரிசல்ட்' எஸ்.எம்.எஸ்.,சில் மதிப்பெண்

 பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள், நாளை வெளியாகின்றன. மதிப்பெண்கள் விபரம், குறுஞ்செய்தியாக, மாணவர்களின் மொபைல்போன் எண்களுக்கு அனுப்பப்பட உள்ளது.

தமிழகத்தில், 10ம் வகுப்பு மாணவர்களுக்கு, மார்ச், 27ல், பொதுத் தேர்வு நடத்தப்படவிருந்தது. கொரோனா பிரச்னையால், தேர்வை ரத்து செய்து, பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டது.

'தேர்வுக்கு விண்ணப்பித்திருந்த மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெறுகின்றனர்; மாணவர்களின் காலாண்டு, அரையாண்டு தேர்வு மதிப்பெண்களை சராசரியாக கணக்கிட்டு, மதிப்பெண்கள் வழங்கப்படும்' என, பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.

இதையடுத்து, 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள், நாளை காலை, 9:30 மணிக்கு வெளியாகின்றன. முடிவுகளை, www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in மற்றும் www.dge2.tn.nic.in என்ற, இணையதளங்களில் தெரிந்து கொள்ளலாம்


.மாணவர்கள், பள்ளிகளில் வழங்கிய உறுதிமொழி படிவத்தில் குறிப்பிட்ட, மொபைல்போன் எண்ணுக்கு, குறுஞ்செய்தியாகவும் தேர்வு முடிவுகள் அனுப்பப்பட உள்ளன.மாணவர்கள் தங்களின், தற்காலிக மதிப்பெண் சான்றிழ்களை, வரும், 17ம் தேதி முதல், 21 வரையிலான நாட்களில், பள்ளி தலைமை ஆசிரியர்களிடம் பெற்று கொள்ளலாம் என, அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

அதேநேரம், காலாண்டு, அரையாண்டு தேர்வுகளில் பங்கேற்காமல், வகுப்புகளுக்கும் சரியாக வராத மாணவர்களுக்கு, தேர்ச்சி வழங்கப்படாது. சிலர் காலாண்டு, அரையாண்டு தேர்வுகளில், சில பாடங்களில் தேர்வு எழுதியிருந்தால், அவர்கள் சராசரி மதிப்பெண்ணுடன் தேர்ச்சி செய்யப்படுவர் என, பள்ளிக்கல்வி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

4 comments: