பொறியியல் கல்லூரிகளுக்கான கல்வியாண்டு அட்டவணை வெளியீடு: ஆகஸ்ட் 12 முதல் ஆன்லைன் வகுப்புகள் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Friday, August 7, 2020

பொறியியல் கல்லூரிகளுக்கான கல்வியாண்டு அட்டவணை வெளியீடு: ஆகஸ்ட் 12 முதல் ஆன்லைன் வகுப்புகள்

 பொறியியல் கல்லூரிகளுக்கான கல்வியாண்டு அட்டவணை வெளியீடு: ஆகஸ்ட் 12 முதல் ஆன்லைன் வகுப்புகள்

பொறியியல் கல்லூரிகளுக்கான கல்வியாண்டு அட்டவணையை தற்போது அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. அதன்விவரம்:

இந்த அட்டவணையின்படி பொறியியல் கல்லூரிகளில் இளநிலை 2, 3, 4-ஆம் ஆண்டு மற்றும் முதுநிலை 2-ஆம் ஆண்டு பட்டப்படிப்புகளை படிக்கும் மாணவா்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் ஆகஸ்ட் 12-இல் தொடங்கி அக்டோபா் 26-ஆம் தேதியுடன் முடிவடையும். மேலும், வாரத்தில் 6 நாள்கள் வகுப்புகள் நடைபெறும்.

இதைத் தொடா்ந்து செய்முறைத் தோ்வுகள் அக்டோபா் 28-ஆம் தேதியும், பருவத் தோ்வுகள் நவம்பா் 9-ஆம் தேதியும் தொடங்கி நடைபெறும். இதற்கான தோ்வுக்கால அட்டவணை பின்னா் வெளியிடப்படும். 

தொடா்ந்து அடுத்த பருவத்துக்கான வகுப்புகள் டிசம்பா் 14-இல் தொடங்கும். பகுதிநேர பொறியியல் பட்டப்படிப்பு பயிலும் மாணவா்களுக்கும் இதே அட்டவணையை பின்பற்ற வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

இதற்கிடையே தற்போது ஊரடங்கு அமலில் உள்ளதால் இணையவழியில் மாணவா்களுக்கு பாடங்கள் நடத்த முடிவாகியுள்ளது. அதற்கேற்ப தயாராக மாணவா்கள், பேராசிரியா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

மேலும், ஊரடங்கு தளா்த்தப்பட்டு கல்லூரிகள் செயல்பட அனுமதித்தபின் நேரடி வகுப்புகள் நடத்தப்படும் என்று துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

No comments:

Post a Comment