சிவில் சர்வீசஸ் தேர்வு: அண்ணாவின் பேத்தி தேர்ச்சி: ஐஎப்எஸ் அதிகாரியாகிறார் - Minnal Kalvi Seithi

Breaking

Friday, August 7, 2020

சிவில் சர்வீசஸ் தேர்வு: அண்ணாவின் பேத்தி தேர்ச்சி: ஐஎப்எஸ் அதிகாரியாகிறார்

 சிவில் சர்வீசஸ் தேர்வு: அண்ணாவின் பேத்தி தேர்ச்சி: ஐஎப்எஸ் அதிகாரியாகிறார்

சிவில் சர்வீசஸ் தேர்வில் பேரறிஞர் அண்ணாவின் பேத்தி தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளார். இவருக்கு ஐஎப்எஸ் பதவி கிடைக்க அதிக வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

 மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) 2019ம் ஆண்டுக்கான ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎப்எஸ் உள்ளிட்ட 26 பணிகளுக்கான சிவில் சர்வீஸ் தேர்வை நடத்தியது. இத்தேர்வுக்கான ரிசல்ட் கடந்த 4ம் தேதி வெளியிடப்பட்டது. இத்தேர்வில் பேரறிஞர் அண்ணாவின் பேத்தி பிரித்திகா ராணி(23) தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளார். 

இவர் அகில இந்திய அளவில் 171வது இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளார். அதுவும் தனது முதல் முயற்சியிலே 171வது இடத்தை பிடித்து சாதனையை நிகழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவருக்கு இந்திய அயல் பணி (ஐஎப்எஸ்) இடம் கிடைக்க வாய்ப்புள்ளது.

வெற்றி பெற்ற பிரித்திகா ராணி சென்னை சங்கர் ஐஏஎஸ் அகாடமி மாணவி ஆவார். இவர் தனது முதல்நிலை தேர்வு, முதன்மை மற்றும் நேர்முகத்தேர்வுக்கான பயிற்சியை இங்கு தான் படித்தார். 

முதன்மை தேர்வில் பொது அறிவு பாடத்துடன், மானுடவியல் பாடத்தையும் இங்கு படித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அவருக்கு சங்கர் ஐஏஎஸ் அகாடமி நிர்வாக இயக்குனர் டாக்டர் எஸ்.டி.வைஷ்ணவி பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார். தேர்ச்சி பெற்றுள்ள பிரித்திகா ராணி பொறியியல் பட்டதாரி ஆவார்

No comments:

Post a Comment