செப்டம்பர் 15 வரையில் பத்ம விருதுகளுக்கு விண்ணப்பிக்கலாம்: மத்திய அரசு அறிவிப்பு - Minnal Kalvi Seithi

Breaking

Friday, August 28, 2020

செப்டம்பர் 15 வரையில் பத்ம விருதுகளுக்கு விண்ணப்பிக்கலாம்: மத்திய அரசு அறிவிப்பு

 செப்டம்பர் 15 வரையில் பத்ம விருதுகளுக்கு விண்ணப்பிக்கலாம்: மத்திய அரசு அறிவிப்பு


அடுத்த ஆண்டிற்கான பத்ம விருதுகளுக்கு வரும் செப்டம்பர் 15ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

 பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு ஆண்டுதோறும் பத்ம விபூஷண், பத்ம பூஷண், பத்மஶ–்ரீ விருதுகளை வழங்கி மத்திய அரசு கவுரவித்து வருகிறது. 2021ம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் வரும் ஜனவரி 26ம் தேதி குடியரசு தினத்தையொட்டி அறிவிக்கப்படும். 

இந்த விருதுகளுக்கு ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்கவும், பரிந்துரை செய்வதற்கும் முடியும் என மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

 உள்துறை அமைச்சகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில், ‘கடந்த மே 1ம் தேதி முதல் வரும் செப்டம்பர் 15ம் தேதி வரை விருதுக்கு விண்ணப்பிக்கலாம். https://padmaawards.gov.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பம் செய்யலாம்,’ என கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment