18 அரியரை, நான் இன்னும், 18 வருஷம் எழுதி இருந்தால் கூட, பாஸ் ஆகி இருக்க மாட்டேன்:கொரோனாவிற்கு மிக்க நன்றி - Minnal Kalvi Seithi

Breaking

Saturday, August 29, 2020

18 அரியரை, நான் இன்னும், 18 வருஷம் எழுதி இருந்தால் கூட, பாஸ் ஆகி இருக்க மாட்டேன்:கொரோனாவிற்கு மிக்க நன்றி

 18 அரியரை, நான் இன்னும், 18 வருஷம் எழுதி இருந்தால் கூட, பாஸ் ஆகி இருக்க மாட்டேன்:கொரோனாவிற்கு மிக்க நன்றி

நான், 2018ல், துரைப்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லுாரியில் பி.காம்., முடிந்தேன். இறுதியாண்டு முடிவில், 18 அரியர் வைத்திருந்தேன். ஓராண்டுக்கு பின், தற்போது தான், தேர்வு எழுத முயற்சி செய்து, 4,600 ரூபாய் கட்டணம் செலுத்தினேன்.


இந்த, 18 அரியரை, நான் இன்னும், 18 வருஷம் எழுதி இருந்தால் கூட, பாஸ் ஆகி இருக்க மாட்டேன். முதல்வரின் அறிவிப்பு எல்லையில்லா மகிழ்ச்சி அளித்துள்ளது. கொரோனாவிற்கு மிக்க நன்றி.எம்.ரமேஷ், 22; துரைப்பாக்கம்.


இரண்டாம் ஆண்டில், மூன்று அரியர்கள் இருந்தன. அரியர் கட்டணம் செலுத்தி இருந்தேன். கொரோனா காரணமாக தேர்வு நடக்கவில்லை. கட்டணம் செலுத்தியவர்கள் அனைவரும் பாஸ் என, அரசு அறிவித்ததால், மகிழ்ச்சியாக உள்ளேன்.எஸ்.பிரவீன், 21; பி.பி.ஏ., மூன்றாமாண்டு மாணவன், மூலக்கடை.

No comments:

Post a Comment