அரசாணை இங்கே... பதவி உயர்வு எங்கே? கணினி ஆசிரியர்கள் கேள்வி - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Saturday, August 29, 2020

அரசாணை இங்கே... பதவி உயர்வு எங்கே? கணினி ஆசிரியர்கள் கேள்வி

 அரசாணை இங்கே... பதவி உயர்வு எங்கே? கணினி ஆசிரியர்கள் கேள்வி

கணினி பயிற்றுநர்களுக்கான பதவி உயர்வுக்கு, அரசாணை வெளியிட்டு, ஓராண்டுக்கு மேலாகியும், எந்த நடவடிக்கையும் எடுக்காமல், கிடப்பில் போடப்பட்டுள்ளதாக, புகார் எழுந்துள்ளது.


அரசுப்பள்ளிகளில் மேல்நிலை வகுப்புக்கு, கணினி அறிவியல் பாடம் கொண்டு வரப்பட்டு, கடந்த 1999ல், தொகுப்பூதியத்தில் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். இவர்களுக்கு, பிரத்யேக தேர்வு நடத்தி, 2008ல், நிரந்தர பணியிடமாக அறிவிக்கப்பட்டது.மேல்நிலை வகுப்புகளுக்கு கற்பித்தும், பட்டதாரி ஆசிரியர் நிலையில் தர ஊதியம் நிர்ணயிக்கப்பட்டது. பதவி உயர்வு வழங்க கோரி, வழக்கு தொடுக்கப்பட்டதன் விளைவாக, கடந்தாண்டு பிப்., மாதம், அரசாணை வெளியிடப்பட்டு, ஆசிரியர்களிடம் கருத்துருக்கள் பெறப்பட்டன. 


ஆனால், பதவி உயர்வுக்கான கலந்தாய்வு நடத்தாமல் இழுத்தடிப்பதாக, ஆசிரியர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி கணினி ஆசிரியர் சங்க மாநில தலைவர் செல்வக்குமார் கூறுகையில்,'' மேல்நிலை வகுப்புக்கு கற்பித்தும், முதுநிலை ஆசிரியர் நிலையில் பதவி உயர்த்தாமல், இழுத்தடிக்கப்படுகிறது. அரசாணை வெளியிடப்பட்டும், இப்பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளன. இதனால், 800 ஆசிரியர்கள், பதவி உயர்வுக்கான பணிப்பலன்கள் பெற முடியாமல் தவிக்கிறோம். 


விரைவில் ஆன்லைன் மூலம் கலந்தாய்வு நடத்த, கல்வித்துறை முன்வர வேண்டும்.காலியாக இருந்த 814 இடங்களுக்கு, தேர்வு நடத்தி ரிசல்ட் வெளியிடப்பட்டும், நிரப்பப்படாமல் இழுத்தடிக்கப்படுகிறது. காலியிடங்களை நிரப்பினால் தான், அரசுப்பள்ளிகளின் தேர்ச்சி விகிதத்தை மேலும் அதிகரிக்க முடியும்,'' என்றார்.காலியாக இருந்த 814 இடங்களுக்கு, தேர்வு நடத்தி ரிசல்ட் வெளியிடப்பட்டும், நிரப்பப்படாமல் இழுத்தடிக்கப்படுகிறது. காலியிடங்களை நிரப்பினால் தான், அரசுப்பள்ளிகளின் தேர்ச்சி விகிதத்தை மேலும் அதிகரிக்க முடியும்,

No comments:

Post a Comment