ஆறாம் வகுப்பில் சேர்ந்தால் போன் இலவசம்! - Minnal Kalvi Seithi

Breaking

Saturday, August 29, 2020

ஆறாம் வகுப்பில் சேர்ந்தால் போன் இலவசம்!

 ஆறாம் வகுப்பில் சேர்ந்தால் போன் இலவசம்!

அன்னூர்:பொன்னேகவுண்டன்புதூர் அரசு உயர்நிலைப்பள்ளியில், சேருவோருக்கு மொபைல் போன் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இப்பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழகம் மற்றும் முன்னாள் மாணவர்கள் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'இப்பள்ளியில், ஆறாம் வகுப்பில் சேருவோருக்கு, ஒரு மொபைல் போன் இலவசமாக வழங்கப்படும். மாணவர்களின் இடைநிற்றலை தடுக்கவும், வேறு பள்ளிகளுக்கு செல்லாமல் இருக்கவும், ஊக்கப்படுத்த மொபைல் போன் வழங்குகிறோம். 

அதிக மதிப்பெண் பெறும், மாணவ, மாணவியருக்கு ஊக்கப்பரிசு வழங்க உள்ளோம்' என தெரிவித்துள்ளனர்,ஆறாம் வகுப்பு சேருவோருக்கு மொபைல் போன் இலவசம் என்னும் அறிவிப்பு, மசக்கவுண்டன் செட்டிபாளையம் ஊராட்சியில், பெற்றோர் மற்றும் மாணவர்கள் மத்தியில் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment