பள்ளியில் பாடம் நடத்த கோரிக்கை - Minnal Kalvi Seithi

Breaking

Saturday, August 29, 2020

பள்ளியில் பாடம் நடத்த கோரிக்கை

 பள்ளியில் பாடம் நடத்த கோரிக்கை

வால்பாறை மா.கம்யூ., கட்சியின் செயலாளர் பரமசிவம் முதல்வர், பள்ளி கல்வித்துறை அமைச்சருக்கு அனுப்பிய மனுவில் கூறியிருப்பதாவது:


வால்பாறை பகுதிகளில் மொபைல்போன்களில் 'சிக்னல்' கிடைப்பதில்லை. மேலும், பெற்றோரிடம் ஸ்மார்ட் போன் வசதி இல்லாததால், மாணவர்கள் 'ஆன்லைன்' கல்வி பயில முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. தொலை தொடர்பு நிறுவனங்களிடம் ஆலோசித்து, வால்பாறையில் 'டவர்கள்' அமைக்க வேண்டும்.

மாணவர்களின் கல்வி பாதிக்காமல் இருக்க, எஸ்டேட் பகுதிகளில் உள்ள துவக்கப்பள்ளிகளில், ஆசிரியர்கள் பாடம் நடத்த வேண்டும். ஒரு நாளுக்கு ஒரு ஆசிரியர் என்ற வகையில், அனைத்து பாடப்பிரிவுகளிலும் பாடம் நடத்த வேண்டும்.இவ்வாறு, மனுவில் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment