பிளஸ் 1 மாணவர் சேர்க்கையில் இடஒதுக்கீடு பின்பற்றப்பட வேண்டும்: பள்ளிக்கல்வித் துறை உத்தரவு - Minnal Kalvi Seithi

Breaking

Friday, August 14, 2020

பிளஸ் 1 மாணவர் சேர்க்கையில் இடஒதுக்கீடு பின்பற்றப்பட வேண்டும்: பள்ளிக்கல்வித் துறை உத்தரவு

 பிளஸ் 1 மாணவர் சேர்க்கையில் இடஒதுக்கீடு பின்பற்றப்பட வேண்டும்: பள்ளிக்கல்வித் துறை உத்தரவு

பிளஸ் 1 மாணவர் சேர்க்கையின்போது பள்ளிகள் இடஒதுக்கீடு நடைமுறையைப் பின்பற்ற வேண்டும் என்று பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.


இதுகுறித்து பள்ளிக்கல்வி இயக்குநர் ச.கண்ணப்பன், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:


அனைத்துவித மேல்நிலைப் பள்ளிகளிலும் பிளஸ் 1 மாணவர் சேர்க்கை ஆகஸ்ட் 24-ம் தேதி தொடங்குகிறது. இதையடுத்து சிறுபான்மை கல்வி நிறுவனங்கள் நீங்கலாக மற்ற அனைத்துவித பள்ளிகளிலும் இடஒதுக்கீடு விதிகளின்படி பிளஸ் 1 மாணவர் சேர்க்கை நடத்தப்பட வேண்டும். 

அந்தவகையில் பொதுப்பிரிவுக்கு 31 சதவீதம், பிற்படுத்தப்பட்டோர் 26.5 சதவீதம், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் 20 சதவீதம், பிற்படுத்தப்பட்ட இஸ்லாமியர் 3.5 சதவீதம், ஆதிதிராவிடர் 18 சதவீதம், பழங்குடியினர் 1 சதவீதம் என்ற அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்க வேண்டும்.


அதேபோல, சேர்க்கை பட்டியல் தயாரிக்கும்போது 10-ம் வகுப்பில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் முன்னுரிமை தரவேண்டும். மேலும், இதுதொடர்பான உரிய அறிவுறுத்தல்களை பள்ளிகளுக்கு மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் வழங்க வேண்டும்.


இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment