மதிப்பெண் வழங்கியதில் குளறுபடி குற்றச்சாட்டு: முற்றுகையிட்ட பெற்றோருக்கு பலன் கிடைக்குமா? - Minnal Kalvi Seithi

Breaking

Friday, August 14, 2020

மதிப்பெண் வழங்கியதில் குளறுபடி குற்றச்சாட்டு: முற்றுகையிட்ட பெற்றோருக்கு பலன் கிடைக்குமா?

 மதிப்பெண் வழங்கியதில் குளறுபடி குற்றச்சாட்டு: முற்றுகையிட்ட பெற்றோருக்கு பலன் கிடைக்குமா?

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில், மதிப்பெண் வழங்கியதில், குளறுபடி என புகார் தெரிவித்து, தனியார் பள்ளியை முற்றுகையிட்ட பெற்றோர்களுக்கு, பலன் கிடைக்குமா? என, எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

ஈரோடு அருகே மாமரத்துபாளையத்தில், தனியார் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியை, பெற்றோர்கள் நேற்று முன்தினம் முற்றுகையிட்டனர். 

பத்தாம் வகுப்பு தேர்வில், காலாண்டு, அரையாண்டு பரிட்சையில், 100 மதிப்பெண்ணுக்கு விடைத்தாள் திருத்தாமல், 85 மதிப்பெண்ணுக்கு மட்டுமே திருத்தியதால், தங்கள் குழந்தைகளின் மதிப்பெண் குறைந்து விட்டதாக புகார் கூறினர். பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகளின் அறிவுரையின்படி, புகாரை மனுவாக எழுதிக்கொடுத்து திரும்பினர்.


இதுகுறித்து பள்ளி கல்வித்துறையினர் கூறியதாவது: கொரோனா ஊரடங்கால், நடப்பாண்டு பத்தாம் வகுப்பு தேர்வு நடத்த முடியாத நிலையில், அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. அதேசமயம் காலாண்டு, அரையாண்டு தேர்வு மதிப்பெண், வருகை பதிவேடு அடிப்படையில், மதிப்பெண் வழங்கப்படும் என்று, அரசு அறிவித்தது.

 இதன் அடிப்படையில், அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளை ஆய்வு செய்து, மதிப்பெண் வழங்க, பள்ளி கல்வித்துறை சார்பில், ஆசிரியர் குழு அமைக்கப்பட்டது. ஈரோடு மாவட்டத்தில், அனைத்து பள்ளிகளின் விடைத்தாள்கள், வருகை பதிவேடு விபரங்கள், ரங்கம்பாளையத்தில் உள்ள ஒரு பள்ளியில் வைத்து, ஆசிரியர் குழுவால் பரிசீலிக்கப்பட்டு, மதிப்பெண் வழங்கப்பட்டது.


மாவட்டத்தில் ஒரு சில தனியார் பள்ளிகள், 85, 60 மதிப்பெண்களை அடிப்படையாக கொண்டு விடைத்தாள் திருத்தியதாக தகவல் வந்தது. ஆனாலும், அனைத்துவித பள்ளிகளுக்கும், 100 மதிப்பெண்களுக்கு மாற்றம் (கன்வெர்ஷன்) செய்யப்பட்டே, மதிப்பெண் வழங்கப்பட்டுள்ளது. எனினும் முதன்மை கல்வி அலுவலர், தனக்கு வந்த மனு அடிப்படையில், ஆசிரியர் குழுவிடம் இதுபற்றி விசாரிப்பார். இவ்வாறு அவர்கள் கூறினர்.

No comments:

Post a Comment