பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக வீடியோ காலிலும் இனி புகார் தெரிவிக்கலாம் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Thursday, August 13, 2020

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக வீடியோ காலிலும் இனி புகார் தெரிவிக்கலாம்

 பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக வீடியோ காலிலும் இனி புகார் தெரிவிக்கலாம்

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக இனி வாரம் 2 நாட்கள் வீடியோ காலிலும் புகார் தெரிவிக்கலாம் என காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் அறிவித்துள்ளார்.


காவல் துணை ஆணையர் ஜெயலட்சுமி தலைமையில்பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்பு பிரிவு, சென்னை ஆயிரம் விளக்கில் செயல்பட்டு வருகிறது. சென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு ஏற்படும் பிரச்சினைகள் தொடர்பாக 91502-50665 என்ற தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் என துணை ஆணையர் ஜெயலட்சுமி அறிவித்திருந்தார். அதன்படி, கடந்த 7-ம் தேதி முதல் இந்த தொலைபேசி எண்ணுக்கான கட்டுப்பாட்டு அறை செயல்பட்டு வருகிறது.


இந்நிலையில், சென்னை காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால், நேற்று வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:


மக்களுக்கான சேவையை விரிவுபடுத்தும் வகையில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக இந்த குற்றத்தடுப்பு பிரிவு துணைஆணையரை நேரடியாக காணொலி அழைப்பு (வீடியோ கால்) மூலம் 91502-50665 என்றஎண்ணில் பொதுமக்கள் செவ்வாய், வெள்ளி ஆகிய கிழமைகளில் மதியம் 12 முதல் 1 மணி வரை அணுகலாம். உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment