பிளஸ் 1 மறுகூட்டல், மறுமதிப்பீடு நாளை முதல் விண்ணப்பிக்கலாம் - Minnal Kalvi Seithi

Breaking

Saturday, August 29, 2020

பிளஸ் 1 மறுகூட்டல், மறுமதிப்பீடு நாளை முதல் விண்ணப்பிக்கலாம்

 பிளஸ் 1 மறுகூட்டல், மறுமதிப்பீடு நாளை முதல் விண்ணப்பிக்கலாம்

 பிளஸ் 1 மறுமதிப்பீடு மற்றும் மறுகூட்டலுக்கு, நாளை முதல் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். பிளஸ் 1 பொது தேர்வு எழுதிய மாணவர்கள், விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்திருந்தால், அவர்களுக்கு, 25ம் தேதி முதல், விடைத்தாள் நகல் ஆன்லைனில் வழங்கப்படுகிறது.


விடைத்தாளை, www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில், பதிவு எண், பிறந்த தேதியை பதிவு செய்து, பதிவிறக்கம் செய்ய வேண்டும். விடைத்தாள் நகலை பார்த்த பின், மதிப்பெண்களை மறுகூட்டல் செய்ய வேண்டும் என்றோ, விடைத்தாளை மறுமதிப்பீடு செய்ய வேண்டும் என்றோ விரும்பினால், தனியாக விண்ணப்பிக்க வேண்டும்


.அரசு தேர்வு துறையின் மேற்கண்ட இணையதளத்தில், அதற்கான விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, சேவை மையங்கள் வழியே விண்ணப்பிக்க வேண்டும். நாளை முதல் செப்., 2 வரை விண்ணப்பிக்க, அவகாசம் தரப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment