அரசு பள்ளி அட்மிஷனில் பாரபட்சம்: பெற்றோர் குற்றச்சாட்டு ; அதிகாரி மறுப்பு - Minnal Kalvi Seithi

Breaking

Saturday, August 29, 2020

அரசு பள்ளி அட்மிஷனில் பாரபட்சம்: பெற்றோர் குற்றச்சாட்டு ; அதிகாரி மறுப்பு

 அரசு பள்ளி அட்மிஷனில் பாரபட்சம்: பெற்றோர் குற்றச்சாட்டு ; அதிகாரி மறுப்பு


அரசு மேல்நிலைப் பள்ளியில், பிளஸ் 1 மாணவருக்கு அட்மிஷன் வழங்குவதில் பாரபட்சம் காட்டுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.திருப்பூர் அருகே கணக்கம்பாளையத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. 1,450 மாணவர்கள் படிக்கின்றனர். பிளஸ் 1 அட்மிஷன் நடந்து வருகிறது.


 குறிப்பிட்ட சிலருக்கு அட்மிஷன் வழங்க மறுப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.இது குறித்து, சில பெற்றோர் கூறுகையில், 'பள்ளி மாணவர்களின் பெற்றோர் அல்லாதவர், பெற்றோர் ஆசிரியர் கழகத்தில் உறுப்பினர்களாக உள்ளனர். அட்மிஷனுக்கு வரும் மாணவர், பெற்றோர் ஊராட்சி தலைவரிடம் பரிந்துரை கடிதம் வாங்க வேண்டும் என தெரிவிக்கின்றனர். அட்மிஷன் நேரத்தில், பள்ளி கேட் இழுத்து மூடப்படுகிறது,' என்றனர்.


இந்த பிரச்னை குறித்து, தலைமை ஆசிரியர் கிருஷ்ணவேணி கூறுகையில், 'பள்ளியில் பிளஸ் 1 மொத்தம் இட ஒதுக்கீடு, 180. இவை முழுமையாக நிரம்பி விட்டது. இருப்பினும் அட்மிஷனை தவிர்க்காமல் விண்ணப்பம் கூடுதலாக வாங்கி வைத்துள்ளோம். தொடர்ந்து பள்ளி செயல்பட்டு வருகிறது; அட்மிஷனும் நடக்கிறது. சிலர் வேண்டு மென்றே, வீண் குழப்பத்தை ஏற்படுத்துகின்றனர்,' என்றார்.


கணக்கம்பாளையம் பள்ளி சர்ச்சை குறித்து, முதன்மை கல்வி அலுவலர் ரமேஷிடம் கேட்டபோது, ''பள்ளியை பூட்டி, அட்மிஷன் வேண்டாம் என தவிர்க்க வாய்ப்பே இல்லை. அட்மிஷன் தொடர்ந்து நடக்கிறது. தவறுகள் இருந்தால், பெற்றோர் நேரடியாக தெரிவிக்கலாம். கண்டிப்பாக, விசாரிக்கிறேன்,' என்றார்.

No comments:

Post a Comment