மாவட்ட கல்வி அலுவலர் பதவி உயர்வுக்கு 20 பேர் பட்டியல் தயார்: விரைவில் வெளியாக வாய்ப்பு - Minnal Kalvi Seithi

Breaking

Tuesday, August 18, 2020

மாவட்ட கல்வி அலுவலர் பதவி உயர்வுக்கு 20 பேர் பட்டியல் தயார்: விரைவில் வெளியாக வாய்ப்பு

 மாவட்ட கல்வி அலுவலர் பதவி உயர்வுக்கு 20 பேர் பட்டியல் தயார்: விரைவில் வெளியாக வாய்ப்பு

தமிழகத்தில் பள்ளிக் கல்வித் துறையில் மாவட்ட கல்வி அலுவலர் பதவி உயர்வுக்கு 20 பேர் கொண்ட பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த பட்டியல் விரைவில் வெளியாகலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. 


தமிழகத்தில் பள்ளிக் கல்வித் துறையில் மாவட்ட கல்வி அலுவலர்கள் மற்றும் அந்த அந்தஸ்துள்ள பணியிடங்களுக்கு தற்காலிக பெயர் பட்டியலை பள்ளிக் கல்வித் துறை தயாரித்துள்ளது. இதன்படி அரசு உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளிகளில் தலைமை ஆசிரியர்களாக பணிபுரிந்து வரும் தலா 10 பேர் வீதம் 20 பேர் கொண்ட பதவி உயர்வு பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது

.இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ள தலைமை ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை ஏதும் நிலுவையில் உள்ளதா? அந்தத் தலைமை ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை ஏதும் தொடரப்பட்டு இறுதியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதா, அவர்கள் மீது ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறையில் நடவடிக்கைகள் ஏதும் நிலுவையில் உள்ளதா? 

தலைமை ஆசிரியர்கள் யாராவது விருப்ப ஓய்வில் சென்றுள்ளனரா? தலைமை ஆசிரியர்கள் விருப்ப மாறுதலில், நிர்வாக மாறுதலில் மாற்றம் செய்யப்பட்டிருப்பின் தற்போது பணிபுரியும் பள்ளி ேபான்ற விவரங்களை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் தயாரித்து அனுப்ப கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.


இந்த பதவி உயர்வு பட்டியலில் நெல்லை மாவட்டம், வடக்கு செழியநல்லூர் அரசு மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் ராமசுப்பு, தென்காசி மாவட்டம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர் செந்தூர் பாண்டி, செங்கோட்டை ராமமந்திரம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர் இவாஞ்சலின் டேவிட் மற்றும் திருப்பூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, மதுரை, தேனி, நாகப்பட்டினம், கடலூர் மாவட்டத்தில் தலா ஒருவர் என மொத்தம் 10 பேர் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பிரிவில் மாவட்ட கல்வி அலுவலர் பதவி உயர்வு பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.


அரசு உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் பிரிவில் இருந்து மாவட்ட கல்வி அலுவலர் பதவி உயர்வுக்கு தயாரிக்கப்பட்டுள்ள பட்டியலில் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து யாரும் இடம் பெறவில்லை. 

திருவாரூர் மாவட்டத்தில் இருவர், திருவள்ளூர் மாவட்டத்தில் மூவர், சிவகங்கை, காஞ்சிபுரம், விருதுநகர், மதுரை, திருச்சி மாவட்டங்களில் இருந்து தலா ஒருவர் என மொத்தம் 10 பேர் இடம் பெற்றுள்ளனர். மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களின் அறிக்கைக்கு பின்னர் இவர்களுக்கு மாவட்ட கல்வி அலுவலர் பதவி உயர்வு விரைவில் வழங்கப்படும் என பள்ளிக் கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

No comments:

Post a Comment