முதுகலை தமிழ் படித்தால் மாதம் ரூ.2000 உதவித்தொகை - Minnal Kalvi Seithi

Breaking

Thursday, August 13, 2020

முதுகலை தமிழ் படித்தால் மாதம் ரூ.2000 உதவித்தொகை

 முதுகலை தமிழ் படித்தால் மாதம் ரூ.2000 உதவித்தொகை

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் பட்டப் படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பப் பதிவு தொடங்கியுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க ஆகஸ்ட் 31-ம் தேதி கடைசி நாளாகும்.


இதுகுறித்துத் தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:


''உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் தமிழ் முதுகலை (எம்.ஏ. தமிழ்), ஐந்தாண்டு ஒருங்கிணைந்த தமிழ் முதுகலை (Five year Integ. P.G. M.A Tamil) மற்றும் தமிழ் ஆய்வியல் நிறைஞர் (M.Phil.) பட்ட வகுப்புகள் ஆண்டுதோறும் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன.


2020-21 ஆம் கல்வியாண்டிற்கான மேல்குறிப்பிட்டுள்ள பட்டப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை விரைவில் தொடங்கப்பட உள்ளது.


கட்டண விவரம்:


தமிழ் ஆய்வியல் நிறைஞர் வகுப்பு (M.Phil.) - ரூ. 4,600/-

தமிழ் முதுகலை (எம்.ஏ. தமிழ்) - கட்டணம் இல்லை

ஐந்தாண்டு ஒருங்கிணைந்த தமிழ் முதுகலை - ரூ.2,400/-


சேர்க்கை விண்ணப்பங்களை தமிழாராய்ச்சி நிறுவனத்தின் இணையப் பக்கத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அஞ்சல் வழியிலும் பெற்றுக் கொள்ளலாம்.


விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள்: 31.08.2020


சேர்க்கை தொடர்பான விதிமுறைகள் மற்றும் தகவல்களை http://www.ulakaththamizh.in/ என்ற இணைய முகவரியில் தெரிந்து கொள்ளலாம்.


தமிழ் முதுகலை வகுப்பில் சேர்க்கை பெறும் மாணவர்களில் 15 பேருக்கு தமிழக அரசால் கல்வி உதவித் தொகையாக மாதந்தோறும் தலா ரூ,2000 வழங்கப்படும்''.


இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது

1 comment: