அரசு மற்றும் கலைக் கல்லூரிகளில் ஆகஸ்ட் 28 ல் அட்மிஷன் துவக்கம் - Minnal Kalvi Seithi

Breaking

Thursday, August 27, 2020

அரசு மற்றும் கலைக் கல்லூரிகளில் ஆகஸ்ட் 28 ல் அட்மிஷன் துவக்கம்

 அரசு மற்றும் கலைக் கல்லூரிகளில் ஆகஸ்ட் 28 ல் அட்மிஷன் துவக்கம்
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் வரும், 28ல் அட்மிஷன் துவங்குகிறது.அரசு கல்லூரிகளில் இளங்கலை பட்டப்படிப்புக்கு விண்ணப்பம் வழங்கப்பட்டு வருகிறது.


 இம்மாதம், 28 முதல் செப்., 4 வரை அட்மிஷன் நடத்த கல்லூரி கல்வி இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.

அதற்கான வழிகாட்டி நெறிமுறைகளும் வெளியிடப்பட்டுள்ளன. அதில், 'அட்மிஷனுக்கு பெற்றோர் மாணவர் அழைத்து வர கூடாது.

மாணவர் கல்லூரியில் சேர தேர்வு செய்யப்பட்ட விவரத்தை ஒரு நாள் முன்னதாக எஸ்.எம்.எஸ்., மூலம் அல்லது மொபைல் எண்ணில் அழைத்து மாணவருக்கு தெரியப்படுத்த வேண்டும்.


ஒரு மாணவர் ஒரே கல்லூரியில் ஒன்றுக்கும் மேற்பட்ட, பாடப்பிரிவுகளுக்கு விண்ணப்பித்து, இரண்டு பிரிவுகளுக்கு தேர்வு செய்யப்பட்டால், மாணவர்களின் விருப்பத்துக்கு ஏற்ப ஒதுக்கீடு செய்ய வேண்டும்.

மதிப்பெண் தரவரிசை அடிப்படையில் இடஒதுக்கீடு, அட்மிஷன் மேற்கொள்ள வேண்டும்,' என கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment