மாவட்ட கல்வி அலுவலராக தலைமை ஆசிரியர் நரேந்திரன் நியமனம் - Minnal Kalvi Seithi

Breaking

Wednesday, August 26, 2020

மாவட்ட கல்வி அலுவலராக தலைமை ஆசிரியர் நரேந்திரன் நியமனம்

 மாவட்ட கல்வி  அலுவலராக தலைமை ஆசிரியர் நரேந்திரன் நியமனம்


திருப்பூர் மாவட்ட கல்வி அலுவலராக முத்துார் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் நரேந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார்.மாவட்ட கல்வி அலுவலராக பணிபுரிந்த சித்ரா, 2019, மே 30ம் தேதியுடன் பணி ஓய்வு பெற்றார். 

அதன்பின், காலியாக இருந்த அப்பணியிடத்திற்கு நஞ்சப்பா மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பழனிசாமி, தற்போது வரை மாவட்ட கல்வி அலுவலராக பணியாற்றி வருகிறார்.

இச்சூழலில், நேற்று முத்துார் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியரான நரேந்திரன் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளார். 


முதன்முதலில், ஊட்டியில் தன் பணியை துவக்கிய இவர், அங்கு ஓராண்டும், காங்கயம் அரசு மேல்நிலைப்பள்ளியில், 22 ஆண்டு முதுகலை ஆசிரியராகவும், முத்துார் அரசு மேல்நிலைப்பள்ளியில் கடந்த, எட்டு ஆண்டுகளாக தலைமை ஆசிரியராகவும் பணிபுரிந்தவர், என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment