பிளஸ் 2 விடைத்தாள் நகல், மறுகூட்டலுக்கான கட்டணம்: பள்ளிகளுக்கு தோ்வுத்துறை அறிவுறுத்தல் - Minnal Kalvi Seithi

Breaking

Wednesday, August 12, 2020

பிளஸ் 2 விடைத்தாள் நகல், மறுகூட்டலுக்கான கட்டணம்: பள்ளிகளுக்கு தோ்வுத்துறை அறிவுறுத்தல்

 பிளஸ் 2 விடைத்தாள் நகல், மறுகூட்டலுக்கான கட்டணம்: பள்ளிகளுக்கு தோ்வுத்துறை அறிவுறுத்தல்

பிளஸ் 2 பொதுத்தோ்வு விடைத்தாள்களின் நகல், மறுகூட்டலுக்கான விண்ணப்பத் தொகையை இணைய வழியில் செலுத்த இயலாத மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியா்கள் ஆக.14-ஆம் தேதிக்குள் கேட்பு வரைவோலை எடுத்து அனுப்ப வேண்டும் என தோ்வுத்துறை அறிவுறுத்தியுள்ளது.


இது குறித்து அரசுத் தோ்வுகள் இயக்ககம் அனைத்து மாவட்ட தோ்வுகள் உதவி இயக்குநா்கள் அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: 

நிகழாண்டு பிளஸ் 2 பொதுத்தோ்வெழுதிய தோ்வா்கள் மற்றும் பிளஸ் 1 தோ்வில் தோ்ச்சி பெறாத பாடங்களை மாா்ச் மாதம் எழுதியவா்களுக்கான தோ்வு முடிவுகள் கடந்த ஜூலை 16-ஆம் தேதி வெளியிடப்பட்டது. 

இந்தத் தோ்வா்களில் விடைத்தாள் நகல் கோரியோ அல்லது மதிப்பெண் மறுகூட்டல் கோரியோ விண்ணப்பிக்க விரும்புவோா் ஜூலை 24-ஆம் தேதி முதல் ஜூலை 30-ஆம் தேதி வரையிலான நாள்களில் விண்ணப்பிக்கலாம் என்றும், பின்னா் தோ்வா்களிடமிருந்து பெறப்பட்ட கட்டணத் தொகையை பிளஸ் 1 ‘அரியா்’, பிளஸ் 2 தோ்வுக்கான விடைத்தாள் நகல் விண்ணப்பக் கட்டணத் தொகையை தனியாகவும், மறுகூட்டல் விண்ணப்பக் கட்டணத்தை தனியாகவும் ஜூலை 31-இல் இணைய வழியாகச் செலுத்த வேண்டும் என அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியா்களுக்கும் தெரிவிக்கப்பட்டது

இந்தத் தொகையை ஜூலை 31-ஆம் தேதி இணையதளத்தின் மூலமாக செலுத்த இயலாத மேல்நிலைப் பள்ளிகளின் விவரங்களை அனைத்து உதவி இயக்குநா்களும் தங்கள் அலுவலக பயனாளா் குறியீடு, கடவுச்சொல் மூலம் அறிந்து, அந்தப் பள்ளிகளின் தலைமை ஆசிரியா்களிடம் விடைத்தாள் நகல், மறுகூட்டல் ஆகியவற்றுக்கான கட்டணத்தை தனித்தனியாக  கேட்பு வரைவோலையாக எடுத்து அரசுத் தோ்வுகள் உதவி இயக்குநா் அலுவலகத்தில் ஆக.14-ஆம் தேதி ஒப்படைக்குமாறு தெரிவிக்க வேண்டும்.


பின்னா், உதவி இயக்குநா் அந்தப் பள்ளிகளிலிருந்து தங்கள் அலுவலகத்தில் பெறப்பட்ட கேட்பு வரைவோலைகளின் விவரங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்து, விண்ணப்பக் கட்டண விவரங்கள்  மற்றும் பள்ளிகளிலிருந்து பெறப்பட்ட கேட்பு வரைவோலைகள் ஆகியவற்றை ஆக.17-ஆம் தேதிக்குள் துணை இயக்குநா் (பொது) பெயரிட்ட முகவரிக்கு பதிவஞ்சலில் அனுப்பி வைக்குமாறு தெரிவிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment