பிளஸ் 2 மாணவர்களுக்கு இன்று விடைத்தாள் நகல் கிடைக்கும் - Minnal Kalvi Seithi

Breaking

Monday, August 17, 2020

பிளஸ் 2 மாணவர்களுக்கு இன்று விடைத்தாள் நகல் கிடைக்கும்

 பிளஸ் 2 மாணவர்களுக்கு இன்று விடைத்தாள் நகல் கிடைக்கும்

தழிழகத்தில் மார்ச் மாதம் நடந்த பிளஸ் 1(அரியர்) தேர்வு, பிளஸ் 2 மற்றும் மறு தேர்வு எழுதிய மாணவர்களில் சிலர் விடைத்தாள் நகல் கேட்டு விண்ணப்பித்துள்ளனர். 

அவர்கள் இன்று முதல் www.dge.tn.gov.in  என்ற இணைய தளத்தில் பதிவெண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்து, தாங்கள் விண்ணப்பித்த பாடங்களுக்கு உரிய விடைத்தாள் நகலை பதிவிறக்கம் செய்து, மறுகூட்டல்-2, அல்லது மறு மதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்க விரும்பினால் இதே இணைய தள முகவரியில்,‘Application for Retotalling/Revaluation’ என்ற தலைப்பை கிளிக் செய்து வெற்று விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். 

இந்த விண்ணப்பத்தை பூர்த்தி செய்து இரு நகல்களை எடுத்து 21ம் தேதி முதல் 25ம் தேதி வரை சம்பந்தப்பட்ட மாவட்ட கல்வி அலுவலர் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும். மறு மதிப்பீடு செய்ய பாடம் ஒவ்வொன்றுக்கும் ரூ. 505, மறு கூட்டல்-2 செய்ய உயிரியல் பாடம் மட்டும் ரூ. 305, மற்ற பாடங்கள்(ஒவ்வொன்றுக்கும்) ரூ. 205 கட்டணமாக செலுத்த வேண்டும்.

No comments:

Post a Comment