பகுதி நேர பி.இ படிப்புக்கான மாணவர் சேர்க்கை: ஆகஸ்ட் 30 வரை ஆன்லைனில் விண்ணப்பம் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Wednesday, August 19, 2020

பகுதி நேர பி.இ படிப்புக்கான மாணவர் சேர்க்கை: ஆகஸ்ட் 30 வரை ஆன்லைனில் விண்ணப்பம்

 பகுதி நேர பி.இ படிப்புக்கான மாணவர் சேர்க்கை: ஆகஸ்ட் 30 வரை ஆன்லைனில் விண்ணப்பம்

பகுதி நேர பி.இ, பி.டெக் படிப்புக்கான மாணவர்கள் சேர்க்கைக்கு ஆகஸ்ட் 30-ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என காரைக்குடி அழகப்பா செட்டியார் அரசு பொறியியல் கல்லூரி முதல்வர் தெரிவித்துள்ளார். 

பாலிடெக்னிக் மற்றும் பி.எஸ்சி (கணிதம்) முடித்தவர்கள் பி.இ, பி.டெக் நேரடி இரண்டாம் ஆண்டு சேரலாம். தமிழகம் முழுவதும் உள்ள 465-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளில் நேரடி சேர்க்கைக்கு என 10 சதவீத இடங்கள் என 90 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்கள் ஒதுக்கப்படுகின்றன. நேரடி இரண்டாம் ஆண்டு சேர்க்கை காரைக்குடி அழகப்ப செட்டியார் அரசு பொறியியல் கல்லூரியில் ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படுவது வழக்கம்.


இந்த ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை விண்ணப்ப படிவங்கள் கொரோனா பாதிப்பு காரணமாக ஆன்லைன் மூலம் ஆகஸ்ட் 10-ம் தேதி முதல் ஆகஸ்ட் 30-ம் தேதி வரை பெறப்பட்டு வருகின்றன. மாணவர்கள் தங்களின் மொபைல் எண், இ-மெயில் உதவியுடன் பதிவு செய்து விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம்


முன்பு மாணவர்களை நேரில் வரவழைத்து கவுன்சலிங் நடந்தது. தற்போது கொரோனா பாதிப்பில் இருந்து மாணவர்களை பாதுகாக்க முதல் முறையாக இந்த ஆண்டுக்கான கவுன்சலிங் வீட்டிலிருந்தபடியே இணையதளம் மூலம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

 மாணவர்கள் தங்களின் 5-வது செமஸ்டர் வரை உள்ள மதிப்பெண் விவரங்களை சமர்ப்பித்தால் போதுமானது. இறுதி செமஸ்டர் தேர்வு குறித்து அரசு முடிவு செய்த பின்னர் அறிவிக்கப்படும் தேதியில் கடைசி செமஸ்டர் மதிப்பெண் பதிவிடலாம்.விண்ணப்ப பதிவு மற்றும் கவுன்சலிங்க்கு www.acgcetlea.com, www.tnlea.com என்ற இணையதளங்களை பார்வையிடலாம்.

 விண்ணப்பம் பதிவு செய்வதற்கான வழிமுறைகள் இணையதளத்தில் வீடியோ வடிவத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. இறுதி செமஸ்டர் பற்றிய விவரம் கிடைத்தவுடன் அடுத்த கட்டத்திற்கான வழிமுறைகள் மற்றும் விபரங்கள் இணையதளத்தில் வெளியிடப்படும்

No comments:

Post a Comment