அரசு பள்ளி மாணவர்களுக்கு கனவு மாணவர் விருது - Minnal Kalvi Seithi

Breaking

Wednesday, August 19, 2020

அரசு பள்ளி மாணவர்களுக்கு கனவு மாணவர் விருது

 அரசு பள்ளி மாணவர்களுக்கு கனவு மாணவர் விருது

காஞ்சிபுரம் அடுத்த அங்கம்பாக்கம் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு கனவு மாணவர் விருது வழங்கப்பட்டது. காஞ்சிபுரம் அடுத்த அங்கம்பாக்கம் அரசுப் பள்ளி மாணவர்கள், அறிவியல் மற்றும் கிராமியக் கலையிலும் புதுமைகளை படைத்தலிலும் சிறந்து விளங்குகின்றனர். 

அவர்களில் சிறந்த மாணவர்களான இரா.தருண்பிரசாத், மு.கலைமதி ஆகியோருக்கு டாக்டர் அப்துல் கலாம் கல்வி மற்றும் பசுமை அறக்கட்டளை சார்பில் கனவு மாணவர் - 2020 விருது வழங்கப்பட்டது.

கொரோனா பேரிடர் காரணமாக இஸ்ரோ முன்னாள் தலைவர் மயில்சாமி அண்ணாதுரை, முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமின் செயலாளர் பொன்ராஜ் ஆகியோர் தலைமையில் இணையவழியில் விருது வழங்கும் விழா நடத்தப்பட்டது 


அந்த விருதுகளை அறக்கட்டளை நிறுவனர் ஜெயராஜ் நேரடியாக பள்ளிக்கு சென்று வழங்கினார். நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர் தணிகை அரசு, அறிவியல் ஆசிரியர் சேகர், சீனுவாசன் உள்பட பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment