பொறியியல் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை அக்டோபர் 31 வரை நீட்டிப்பு: ஏஐசிடிஇ-யின் புதிய காலஅட்டவணை வெளியீடு - Minnal Kalvi Seithi

Breaking

Saturday, August 15, 2020

பொறியியல் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை அக்டோபர் 31 வரை நீட்டிப்பு: ஏஐசிடிஇ-யின் புதிய காலஅட்டவணை வெளியீடு

 பொறியியல் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை அக்டோபர் 31 வரை நீட்டிப்பு: ஏஐசிடிஇ-யின் புதிய காலஅட்டவணை வெளியீடு

பொறியியல் கல்லூரி மாணவர்சேர்க்கைக்கான கால அவகாசத்தை அக்டோபர் 31-ம் தேதி வரைநீட்டித்து ஏஐசிடிஇ உத்தரவிட் டுள்ளது.


கரோனா வைரஸ் தொற்றால்நாடு முழுவதும் கல்லூரிகள் திறப்பில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து புதிய கல்வியாண்டுக்கான கால அட்டவணை மற்றும் வழிகாட்டுதல்களை அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி குழுமம் (ஏஐசிடிஇ) கடந்த ஜூலை மாதம்வெளியிட்டது. அதில் பொறியியல்கலந்தாய்வை அக்.20-ம் தேதிக்குள் முடிக்க அறிவுறுத்தியிருந்தது


அதேநேரம் பல்வேறு மாநிலங்களில் தொற்று இன்னும் கட்டுக்குள் வரவில்லை. இதையடுத்து 4-வது முறையாக கல்வியாண்டு அட்டவணையில் திருத்தம் செய்துமாணவர் சேர்க்கைக்கான அவகாசத்தை நீட்டித்து, ஏஐசிடிஇ அறிவிப்பு வெளியிட்டுள்ளது.


அதன்படி, தொழில்நுட்பக் கல்லூரிகளுக்கான அங்கீகார நீட்டிப்பை செப். 15-க்குள் பல்கலைக்கழகங்கள் வழங்கவேண்டும். இதுதவிர பொறியியல் சேர்க்கைக்கான முதல்சுற்று கலந்தாய்வை அக்.20-க்குள் நடத்தி முடிக்க வேண்டும். 2-ம் சுற்று கலந்தாய்வை அக்.31-க்குள் முடித்து, முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு நவம்பர் 1-ம் தேதி முதல் வகுப்புகள் ஆரம்பிக்கப்பட வேண்டும்.


விடுபட்ட இடங்களுக்கான கலந்தாய்வை நவ.15-க்குள் நடத்தவேண்டும். 2, 3-ம் ஆண்டு மாணவர்களுக்கு செப். 1-ம் தேதியும், நேரடி 2-ம் ஆண்டு சேர்ந்தவர்களுக்கு நவ.1-ம் தேதியும் வகுப்புகள் தொடங்க வேண்டும்.


கல்லூரிகள், வகுப்புகளை இணைய வழியிலும் நடத்தலாம். முந்தைய அட்டவணையின்படி ஏற்கெனவே வகுப்புகளை தொடங்கிய கல்லூரிகள், வகுப்புகளை தள்ளிவைத்துக் கொள்ளலாம்.


இவ்வாறு ஏஐசிடிஇ அறிவித் துள்ளது.

No comments:

Post a Comment