சிலம்பம் போட்டியில் சாதனைகள் படைத்த மதுரை சிறுவனுக்கு சர்வதேச விருது - Minnal Kalvi Seithi

Breaking

Saturday, August 15, 2020

சிலம்பம் போட்டியில் சாதனைகள் படைத்த மதுரை சிறுவனுக்கு சர்வதேச விருது

 சிலம்பம் போட்டியில் சாதனைகள் படைத்த மதுரை சிறுவனுக்கு சர்வதேச விருது

சிலம்பம் போட்டியில் மதுரை சிறுவனுக்கு சர்வதேச விருது கிடைத்துள்ளது. மதுரை விராட்டிப்பத்து பகுதியைச் சேர்ந்த ஜெயராமன்-சித்திரக்கனி தம்பதியின் மகனான ஜெ. அதீஸ்ராம் (10).செக்கானூரணி கேரன் பள்ளியில் 5-ம் வகுப்பு படிக்கிறார்.


இவர், விராட்டிபத்து ஸ்ரீ மாருதி சிலம்பம் பள்ளியில் சிலம்பம் கற்று வருகிறார். கடந்த ஆண்டு செப்டம்பரில் மலேசியாவில் நடந்த சர்வதேச சிலம்பம் சாம்பியன்ஷிப் போட்டியில், இரட்டைக் கம்பு பிரிவில் கலந்து கொண்டு முதலிடம் பெற்றார்.


இவர் பல்வேறு மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்றுள்ளார்.


2018-ம் ஆண்டு பஞ்சாபில் நடந்த தேசியப் போட்டியில் பங்கேற்று முதல் பரிசு பெற்றார். இவருக்கு ஹரியாணாவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் தேசிய விளையாட்டு மற்றும்உடல் தகுதி வாரியம் விருதுவழங்கி உள்ளது. இந்த அமைப்பு,சர்வதேச அளவில் சாதனைபடைக்கும் வீரர்களுக்கு ஒவ்வோர் ஆண்டும் விருதுகளை வழங்கி வருகிறது. இந்த ஆண்டுக்கான விருதை ஜெ. அதீஸ்ராமுக்கு வழங்கியுள்ளது.


தற்போது கரோனா ஊரடங்கு என்பதால், இந்த விருதை அந்த நிறுவனம் தபால் மூலம் மாணவருக்கு அனுப்பியுள்ளது

No comments:

Post a Comment