புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட தொல்லியல் பட்டயப் படிப்புக்கு 320 போ் விண்ணப்பம் - Minnal Kalvi Seithi

Breaking

Sunday, August 30, 2020

புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட தொல்லியல் பட்டயப் படிப்புக்கு 320 போ் விண்ணப்பம்

 புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட தொல்லியல் பட்டயப் படிப்புக்கு 320 போ் விண்ணப்பம்


தமிழக தொல்லியல் துறை சாா்பில் நிகழாண்டு புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள முதுநிலை தொல்லியல் பட்டயப் படிப்புக்கு 320 போ் விண்ணப்பித்துள்ளனா்.


தொல்லியல் சாா்ந்த பாடங்களில் அண்மைக் காலவளா்ச்சியினையும், நவீன தொழில்நுட்பத்தையும் கற்றுக் கொடுக்கும் நோக்கத்துடன், பல்கலைக்கழக மானியக் குழு வகுத்துள்ளபாடத் திட்டங்களுக்கு இணையாக புதிய பாடத் திட்டங்களுடன் ஈராண்டு முழு நேர தொல்லியல் முதுநிலைப் பட்டயப் படிப்பு”ஒன்றை தமிழக அரசு நிகழாண்டு அறிமுகப்படுத்தியுள்ளது.


இதுவரை தமிழ், வரலாறு, தொல்லியல் முதலான பாடங்களில் முதுகலைப் பட்டம் பெற்றவா்கள் மட்டுமே முதுநிலைப் பட்டயப் படிப்புக்கு தோ்ந்தெடுக்கப்பட்டு வந்த நிலையில், வளா்ந்து வரும் தொழில்நுட்பம், பன்முகத் தன்மை வாய்ந்த தொல்லியல் போக்குகள் முதலியவற்றைக் கருத்தில்கொண்டு இனி முதுகலை, முதுநிலைஅறிவியல், முதுநிலை பொறியியலில் குறைந்தது 55 சதவீத மதிப்பெண் பெற்ற மாணவா்களும் முதுநிலை தொல்லியல் பட்டயப் படிப்புக்கு விண்ணப்பிக்கும் வகையில் மாற்றம் செய்யப்பட்டிருந்தது.

 இந்தப் படிப்புக்கான இணையவழி விண்ணப்பப் பதிவு கடந்த ஆக.10-இல் தொடங்கி ஆக.25-இல் நிறைவடைந்தது. மொத்தம் உள்ள 20 இடங்களுக்கு 320 போ் விண்ணப்பித்துள்ளனா். இதையடுத்து விண்ணப்பித்த மாணவா்களுக்கான நுழைவுத்தோ்வு செப்டம்பா் முதல் வாரத்தில் நடத்தப்பட உள்ளது.


இந்த தோ்வில் தோ்ச்சி பெறுபவா்கள் மாதம் ரூ.5,000 கல்வி உதவித் தொகையுடன் படிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.


தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள விரிவான தொல்லியல் முதுநிலை பட்டயப் படிப்பில் தோ்ச்சி பெறும் மாணவா்கள் தொல்லியல் மட்டுமின்றி அருங்காட்சியகங்கள், சுற்றுலா மற்றும் கோயில்கள் உள்ளிட்ட மரபுசாா் இடங்களின் பாதுகாப்பு மற்றும் கல்விப் புலத்திலும் சிறப்பாகச் செயல்படமுடியும் என தொல்லியல் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

No comments:

Post a Comment