மத்திய அரசு 4ஆம் கட்ட தளர்வுகள் அறிவிப்பு - Minnal Kalvi Seithi

Breaking

Saturday, August 29, 2020

மத்திய அரசு 4ஆம் கட்ட தளர்வுகள் அறிவிப்பு

 மத்திய அரசு 4ஆம் கட்ட தளர்வுகள் அறிவிப்பு

செப்டம்பர் 7ஆம் தேதி முதல் நாடு முழுவதும் மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. செப்டம்பர் 21 முதல் விளையாட்டு, பொழுதுபோக்கு, கலாசார, அரசியல் நிகழ்ச்சிகளை 100 பேருடன் நடத்தலாம். செப்டம்பர் 21 முதல் திறந்தவெளி கலையரங்குகள், திரையரங்குகள் செயல்பட மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. திரையரங்குகள், நீச்சல் குளங்கள், கேளிக்கை பூங்காக்கள் செயல்பட அனுமதி இல்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.


செப்டம்பர் 30ஆம் தேதி வரை பள்ளி, கல்லூரிகளை திறப்பதற்கான தடை தொடரும் என்று மத்திய உள்துறை தெரிவித்துள்ளது. செப்டம்பர் 21க்கு பிறகு ஆன்லைன் வகுப்புகள் நடத்த 50% ஆசிரியர்கள், பணியாளர்களை பள்ளிக்கு அழைக்கலாம். செப்டம்பர் 21க்கு பிறகு 9-12ஆம் வகுப்பு மாணவர்கள் பெற்றோர் அனுமதியுடன் பள்ளிக்கு வரலாம்.

மத்திய அரசிடம் கலந்தாலோசிக்காமல் மாநில அரசுகள் ஊரடங்கை அமல்படுத்த கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது. கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளை தவிர மற்ற பகுதிகளில் மாநில அரசுகள் ஊரடங்கை அறிவிக்க கூடாது. கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் செப்டம்பர் 30 வரை முழு முடக்கம் தொடரும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.


வெளிநாட்டு விமான சேவைகளுக்கான தடை தொடர்ந்து அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வந்தே பாரத் திட்டத்தின் கீழ் வெளிநாட்டு விமான சேவைகள் தொடர்ந்து செயல்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

 

மாநிலம் விட்டு மாநிலம் செல்ல முழுமையான அனுமதி அளித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. மாநிலத்திற்குள்ளாகவோ , மாநிலம் விட்டு மாநிலம் செல்லவோ இ-பெர்மிட் பெற தேவையில்லை என உத்தரவிடப்பட்டுள்ளது

No comments:

Post a Comment