பிறந்த மண்ணில் கல்வி சேவை: ஊரடங்கில் பட்டதாரி முடிவு - Minnal Kalvi Seithi

Breaking

Tuesday, August 25, 2020

பிறந்த மண்ணில் கல்வி சேவை: ஊரடங்கில் பட்டதாரி முடிவு

 பிறந்த மண்ணில் கல்வி சேவை: ஊரடங்கில் பட்டதாரி முடிவு

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி அருகே வடக்கு விசவனுாரில் பி.எட்., பட்டதாரி, விவசாயத்தில் தாய்க்கு உறுதுணையாக இருப்பதோடு, கிராமப்புற மாணவர்களுக்கு இலவச கல்வி சேவை ஆற்றி வருகிறார்.


இக்கிராமத்தை சேர்ந்தவர் பி.ஜெகந்நாதன் 33.

இவர் பி.எஸ்சி., பி.எட்., மற்றும் பி.ஜி.டி.சி.ஏ., முடித்தார். ராமநாதபுரம் மாவட்டம், ஆனந்துார் அரசு பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கழக நிதியில் 2 ஆண்டு கணித ஆசிரியராக இருந்தார்.


 டெட் தேர்வில் இவர் தேர்ச்சி பெற முடியாததால், ஆசிரியர் பணியில் இருந்து வாழ்க்கை பாதையை மாற்றி, சென்னையில் தனியார் கம்பெனி மேலாளராக இருந்தார்.


மார்ச்சில் கிராமத்திற்கு வந்தவர், ஊரடங்கால் முடங்கிவிட்டார். மனம் தளராமல், வீட்டில் தனியாக இருக்கும் தாய்க்கு உறுதுணையாக விவசாய பணிகளை செய்கிறார். கற்ற கல்வி வீணாகக்கூடாது என்ற எண்ணத்தில், அக்கிராமத்தில் உள்ள ஒன்று முதல் பிளஸ் 2 வரை படிக்கும் மாணவர்களுக்கு இலவசமாக கல்வி கற்றுத்தருகிறார்.

இலவச கல்வி சேவை


அவர் கூறியதாவது,

மாணவர்களுக்கு அரசு இலவச புத்தகம் வழங்கியுள்ளது. இதனால், நான் கற்ற ஆசிரியர் பயிற்சியை வீணாக்க வேண்டாம் என்ற எண்ணத்தில், இக்கிராமத்தை சேர்ந்த 32 மாணவர்களுக்கு மாலை 5:30 - இரவு 8:30 மணி வரை இலவசமாக கல்வி கற்றுத்தருகிறேன். இச்சேவை தொடரும், என்றார்

No comments:

Post a Comment