கரோனா தாக்கம் குறைந்து முழுமனநிறைவு ஏற்படாதவரை பள்ளிகள் திறக்கப்படாது: முதல்வர் திட்டவட்டம் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Saturday, August 15, 2020

கரோனா தாக்கம் குறைந்து முழுமனநிறைவு ஏற்படாதவரை பள்ளிகள் திறக்கப்படாது: முதல்வர் திட்டவட்டம்

 கரோனா தாக்கம் குறைந்து முழுமனநிறைவு ஏற்படாதவரை பள்ளிகள் திறக்கப்படாது: முதல்வர் திட்டவட்டம்

டெல்லியில் கரோனா வைரஸ் தாக்கம் குறைந்து முழுமையான மனநிறைவு ஏற்படாதவரை பள்ளிகள் திறக்கப்படாது என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.


டெல்லி அரசு சார்பில் இன்று 74-வது சுதந்திரதின விழா இன்று தலைமைச் செயலகத்தில் கொண்டாடப்பட்டது. முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் தேசியக் கொடியை ஏற்றிவைத்து மரியாதை ெசலுத்தினார். வழக்கமாக சத்ராசல் அரங்கில் நடக்கும் சுதந்திரதினவிழா, கரோனா வைரஸ் பரவல் காரணமா தலைமைச் செயலகத்துக்கு மாற்றப்பட்டது


சுதந்திரதின விழாவில் முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் பேசியதாவது:


கடந்த இரு மாதங்களோடு ஒப்பிடுகையில் டெல்லியில் கரோனா வைரஸ் தாக்கம் தற்போது கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. இதற்கு ஒத்துழைப்பு அளித்த மத்திய அரசு, அரசு துறைகள், கரோனா போர் வீரர்கள் பல்வேறு அமைப்புகள் அனைவருக்கும் நன்றி தெரிவிக்கிறேன்.


கரோனாவில் சிகிச்சைப் பெற்று குணமடைந்தவர்கள் வீட்டுக்குச் சென்றபின்பும் சுவாசிப்பதில் பெரும் சிரமம் இருப்பதாக பல்வேறு அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இதனால், அடுத்த வாரத்திலிருந்து ஆக்ஸிஜன் அளிக்கும் திட்டத்தை கரோனாவிலிருந்து குணமடைந்தவர்களுக்கு செயல்படுத்த இருக்கிறோம்.


ஆம் ஆத்மி அரசைப் பொறுத்தவரை பள்ளிக் குழந்தைகளின் உடல்நலன், பாதுகாப்பு மிகவும் முக்கியம். நான் சந்தித்த பலரும் என்னிடம் தற்போதுள்ள சூழலில் பள்ளிகளைத் திறக்காதீர்கள் என்று கேட்டுக்கொண்டார்கள். நான் அனைவருக்கும் உறுதியளிப்பது என்னவென்றால், டெல்லியில் கரோனா தாக்கம் குறைந்து முழுமையான மனநிறைவு அடையாதவரை பள்ளிகள் திறக்கப்படாது.

No comments:

Post a Comment