கல்லூரியில் ஷிப்ட் முறை ரத்து மாணவர் எண்ணிக்கை குறையும்? - Minnal Kalvi Seithi

Breaking

Tuesday, August 25, 2020

கல்லூரியில் ஷிப்ட் முறை ரத்து மாணவர் எண்ணிக்கை குறையும்?

 கல்லூரியில் ஷிப்ட் முறை ரத்து மாணவர் எண்ணிக்கை குறையும்?

அரசு கல்லூரிகளில், 'ஷிப்ட்' முறை ரத்து செய்யப்பட்டுள்ளதால், வேலைக்கு சென்று படித்த மாணவர்கள், பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.அரசு கல்லூரிகளில், காலை மற்றும் மதியம் என, 'ஷிப்ட்' முறையில் வகுப்புகள் நடந்தன.


பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்கள், பெரும்பாலும் அரசுக்கல்லூரியில் படிக்கின்றனர்.தற்போது, 'ஷிப்ட்' முறை ரத்து செய்யப்பட்டுள்ளதால், அரசு கல்லூரியில், மாணவர் எண்ணிக்கை குறையும் நிலை ஏற்பட்டுள்ளது.


கல்லூரி பேராசிரியர்கள் கூறியதாவது:


கோவை, திருப்பூர், ஈரோடு உட்பட தொழில் நகரங்களில், ஷிப்ட் முறையில், கல்வி பயிலும் மாணவ - மாணவியர், பின்னலாடை நிறுவனங்களுக்கு, பகுதி நேரமாக வேலைக்கு சென்று சம்பாதிப்பதை வழக்கமாக கொண்டிருந்தனர்.


நீலகிரி, கொடைக்கானல் போன்ற சுற்றுலா நகரங்களில், கல்லூரி படிப்புடன், பகுதி நேரமாக, ஓட்டல் உட்பட சுற்றுலா சார்ந்த பணிகளில், தங்களை ஈடுபடுத்தி வந்தனர். தற்போது, ஷிப்ட் முறை ரத்து செய்யப்பட்டுள்ளதால், மாணவர்களின் கல்வி, பாதிக்கும் சூழல் உள்ளது. இவ்வாறு, அவர்கள் கூறினர்.

No comments:

Post a Comment