சான்றிதழ் பதிவேற்றினால்தான் இன்ஜி., படிப்புக்கு கவுன்சிலிங் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Tuesday, August 25, 2020

சான்றிதழ் பதிவேற்றினால்தான் இன்ஜி., படிப்புக்கு கவுன்சிலிங்

 சான்றிதழ் பதிவேற்றினால்தான் இன்ஜி., படிப்புக்கு கவுன்சிலிங்

இன்ஜி., கவுன்சிலிங்கிற்கு கட்டணம் செலுத்துவதற்கான தேதி முடிந்த நிலையில், சான்றிதழ் பதிவேற்றம் செய்த மாணவர்களுக்கு மட்டுமே, கவுன்சிலிங் அழைப்பு வரும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பிளஸ்2 தேர்வு முடிவுகள் வெளியானதும் இன்ஜி., படிப்புக்கு விண்ணப்பிக்க அனுமதிக்கப்பட்டது. விண்ணப்பம், சான்றிதழ் பதிவேற்றம் என, அனைத்தும் ஆன்லைன் வாயிலாக மேற்கொள்ளப்பட்டது.இன்ஜி., படிப்புக்கான விண்ணப்பம் கடந்த ஜூலை, 15ம் தேதி துவங்கி ஆக., 16ம் தேதி நிறைவடைந்தது. 

இன்ஜி., படிப்புக்கான கட்டணம் மற்றும் சான்றிதழ் பதிவேற்றம் செய்ய ஆக., 20ம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டது. ஆனால், மாணவர்களின் கோரிக்கையை ஏற்று, ஆக., 24ம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டது.

மொத்தம், 1.60 லட்சம் பேர் கவுன்சிலிங்கிற்கு பதிவு செய்துள்ளனர். இதில், 1.31 லட்சம் பேர் கவுன்சிலிங் கட்டணம் செலுத்திய நிலையில், 1.14 லட்சம் பேர் சான்றிதழ் பதிவேற்றம் செய்துள்ளனர்.

இவர்களில் சான்றிதழ் பதிவேற்றம் செய்த மாணவர்கள் மட்டுமே, கவுன்சிலிங்கிற்கு அழைக்கப்படுவர் என தொழில்நுட்ப இயக்குனரகம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment