வங்கி பணியிடங்களுக்கு ஆன்லைனில் இலவச பயிற்சி - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Sunday, August 23, 2020

வங்கி பணியிடங்களுக்கு ஆன்லைனில் இலவச பயிற்சி

 வங்கி பணியிடங்களுக்கு ஆன்லைனில் இலவச பயிற்சி

ஐபிபிஎஸ்சினால் அறிவிக்கப்பட்ட வங்கி காலி பணியிடங்களுக்கு விண்ணப்பித்த திருவள்ளுர் மாவட்ட விண்ணப்பதாரர்களுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தினால் இணையம் வாயிலாக இலவச பயிற்சி வகுப்பு தொடங்கப்பட உள்ளதாக கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் தெரிவித்துள்ளார். 

மேற்காணும், காலி பணியிடங்களுக்கு விண்ணப்பித்துள்ளவர்கள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தொலைபேசி வாயிலாக தங்களது விருப்பத்தினை கைப்பேசி எண்ணுடன் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. 

பயிற்சி வகுப்பு துவங்கும் நாள் கைப்பேசி வாயிலாக தகவல் தெரிவிக்கப்படும். மேலும், விவரங்களுக்கு 044-27660250, 9444815728 என்ற மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம் என்று கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment