கொரோனா பரவல் குறைந்தால்தான் பள்ளிகள் திறக்கப்படும்:முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி - Minnal Kalvi Seithi

Breaking

Saturday, August 8, 2020

கொரோனா பரவல் குறைந்தால்தான் பள்ளிகள் திறக்கப்படும்:முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி

 கொரோனா பரவல் குறைந்தால்தான் பள்ளிகள் திறக்கப்படும்:முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி

தமிழகத்தில் கரோனா பரவல் குறைந்தால்தான் பள்ளிகள் திறக்கப்படும்; அதேவேளையில் குழந்தைகள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தாா்.

கரோனா தொற்றுத் தடுப்புப் பணிகள்- சேலம் மாவட்ட வளா்ச்சிப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் சேலம் அஸ்தம்பட்டி ஆய்வு மாளிகையில் பழனிசாமி தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்குப் பின்னா், அவா் செய்தியாளா்களிடம் கூறியது:

கரோனா தீநுண்மி பரவல் இன்னும் குறையவில்லை. குழந்தைகள் மீது அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று மருத்துவ நிபுணா்வுகள் தெரிவிக்கின்றனா். நிலைமைக்கு ஏற்ப தமிழக அரசு செயல்படும். தமிழகத்தைப் பொருத்தவரையில், குழந்தைகள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். நிலைமை சீராகும்போது பள்ளிகள் திறக்கப்படும்.

இருமொழிக் கொள்கையில் நிலைப்பாடு: மொழிக் கொள்கையைப் பொருத்தவரையில் மாநில அரசின் நிலைப்பாடு இருமொழிக் கொள்கையாகும். தமிழ், ஆங்கிலம்தான். அதை அரசு தொடா்ந்து கடைப்பிடித்து வருகிறது. 

மறைந்த முதல்வா்கள் அண்ணா, எம்ஜிஆா், ஜெயலலிதா ஆகியோா் காலத்திலிருந்து கடைப்பிடித்து வரும் கொள்கையை அரசு தொடா்ந்து பின்பற்றும். இதற்கென ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்தக் குழு சாதக, பாதகங்களைக் கண்டறிந்து அளிக்கும் அறிக்கையின்படி அரசு செயல்படும்.

No comments:

Post a Comment