ஞாயிறு முழு ஊரடங்கு: எதிர்த்து ஐகோர்ட்டில் வழக்கு - Minnal Kalvi Seithi

Breaking

Saturday, August 8, 2020

ஞாயிறு முழு ஊரடங்கு: எதிர்த்து ஐகோர்ட்டில் வழக்கு

 ஞாயிறு முழு ஊரடங்கு: எதிர்த்து ஐகோர்ட்டில் வழக்கு

அனைத்து ஞாயிறு அன்றும், முழு ஊரடங்கை அமல்படுத்துவதை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில், மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சென்னையைச் சேர்ந்த, மனோகரன் என்பவர் தாக்கல் செய்த மனு:

கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக, இந்த மாதத்தில் அனைத்து ஞாயிறன்றும், முழு ஊரடங்கை, தமிழக அரசு அறிவித்துள்ளது. ஞாயிறன்று முழு ஊரடங்கால், சனிக்கிழமைகளில், அதிக கூட்டம் கூடுகிறது. சமூக இடைவெளி பின்பற்றப்படுவது இல்லை. 

மாநிலங்கள்; மாவட்டங்களுக்கு இடையே, 'இ ~ பாஸ்' இல்லாமல் பயணிக்க, மத்திய அரசு அனுமதிக்கிறது. ஆனால் தமிழக அரசு, குறிப்பிட்ட காரணங்களுக்காக மட்டும், இ ~ பாஸ் பெற்றே பயணிக்க அனுமதிக்கிறது. தமிழக அரசு விதிக்கும் கட்டுப்பாடுகள், மத்திய அரசின்உத்தரவை மீறுவதாக உள்ளன. 

தமிழக அரசின் உத்தரவால், சொந்த ஊரில் இருக்கும் என் பெற்றோரை பார்க்க முடியவில்லை. இ ~ பாஸ் வழங்குவதில், முறைகேடுகள் நடப்பதாக செய்திகள் வருகின்றன. எனவே, தமிழகத்துக்குள் பயணிக்க, கட்டுப்பாடுகள் விதித்திருப்பததையும், ஞாயிறன்று முழு ஊரடங்கு அமல்படுத்துவதையும், ரத்து செய்ய வேண்டும்.இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.மனு, விரைவில் விசாரணைக்கு வருகிறது.

No comments:

Post a Comment