மாணவர்களின் வங்கி விபரம்: பள்ளிகளில் திரட்ட உத்தரவு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Wednesday, August 26, 2020

மாணவர்களின் வங்கி விபரம்: பள்ளிகளில் திரட்ட உத்தரவு

 மாணவர்களின் வங்கி விபரம்: பள்ளிகளில் திரட்ட உத்தரவு


பள்ளி திறக்காததால், மாணவர்களுக்கான உதவித்தொகை, உலர் பொருட்களுக்கான தொகை உள்ளிட்டவற்றை வங்கி கணக்கில் செலுத்த, விபரங்கள் திரட்ட உத்தரவிடப்பட்டுள்ளது.

அரசுப்பள்ளிகளில் படிக்கும் பெண் குழந்தைகளின் கல்வி உறுதி செய்ய, எட்டாம் வகுப்பு வரையிலான மாணவிகளுக்கு, கல்வி உதவித்தொகை வழங்குவது வழக்கம்.இத்தொகை, மாணவிகளின் வங்கி கணக்கில், நேரடியாக பரிமாற்றம் செய்யப்படும்.

 ஆண்டுக்கு ஆயிரத்து 500 ரூபாய் வரை, ஊக்கத்தொகையாக வழங்கப்படுகிறது.இதோடு, சத்துணவு சாப்பிடும் எட்டாம் வகுப்பு வரையிலான குழந்தைகளுக்கு, உலர் பொருட்கள் பள்ளிகளில் வழங்கப்படுகிறது. 

உலர் பொருட்கள் பெறாத மாணவர்களுக்கு, வங்கி கணக்கில் பணமாக வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.இதற்காகவும், மாணவர்களின் வங்கி கணக்கு எண் பெற, தலைமையாசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

 வட்டார வாரியாக பெறப்படும் இந்த விபரங்களை, இயக்குனரகத்திற்கு அனுப்பி வைக்க, முதன்மை கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment