கல்லூரி மாணவர்கள் சேர்க்கை: அவகாசம் நீட்டிக்க கோரிக்கை - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Wednesday, August 26, 2020

கல்லூரி மாணவர்கள் சேர்க்கை: அவகாசம் நீட்டிக்க கோரிக்கை

 கல்லூரி மாணவர்கள் சேர்க்கை: அவகாசம் நீட்டிக்க கோரிக்கை


தமிழகத்தில் தனியார் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு அவகாசம் வழங்க வேண்டும்' என, உயர்கல்வி அமைச்சர்அன்பழகனை, கல்லூரி நிர்வாகங்கள் வலியுறுத்தி உள்ளன.


மதுரை காமராஜ் பல்கலை தனியார் கல்லூரிகள் நிர்வாகிகள் சங்க செயலர் ராஜகோபால், அமைச்சருக்கு அனுப்பியகடிதம்:


தமிழகத்தில் கொரோனாவால் கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. நேரடி விண்ணப்ப முறைக்கு தடை விதித்து, 'ஆன்லைன்' விண்ணப்ப முறை அமல்படுத்தப்பட்டது


.கிராமப்புற மாணவர்கள், நகர் பகுதிக்கு வந்து, தனியார் ஆன்லைன் மையங்களில், 500 ரூபாய் வரை கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்கின்றனர். 


பொது பஸ் போக்குவரத்தும் இல்லை.'


ஆன்லைன்' பதிவு உட்பட பல்வேறு நடைமுறை சிக்கலால் தனியார் கல்லூரிகளில், 30 சதவீதமே மாணவர் சேர்ந்துள்ளனர். இது உயர்கல்வியில் பாதிப்பை ஏற்படுத்தும்.ஆக., 24 முதல் ஆன்லைன் வகுப்பு துவங்க, மதுரை காமராஜ் பல்கலை உத்தர விட்டுள்ளது. 


இது ஏற்புடையது அல்ல. இப்பல்கலைக்கு கீழ், 53 தனியார் கல்லைரிகள் உள்ளன.ஜூலை, 20ல் ஆன்லைன் பதிவு துவங்கியது. 


ஆக., 1 முதல், 10 வரை சான்றிதழ் பதிவேற்றம் நடந்தது. 'நெட்ஒர்க்' பிரச்னையால் பதிவேற்ற பணிகள் ஸ்தம்பித்துள்ளன. எனவே, மாணவர் சேர்க்கைக்கு கூடுதல் கால அவகாசம் வேண்டும்.


தனியார் கல்லூரிகள்சேவை மையங்கள் துவங்கி, கட்டணமில்லா ஆன்லைன் பதிவு செய்ய அனுமதிக்க வேண்டும்.செப்., 10க்கு பின் அல்லது தனியார் கல்லூரிகளில், 90 சதவீதம் மாணவர் சேர்க்கை நடந்த பின், முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் துவங்க அனுமதிக்க வேண்டும்.இவ்வாறு, கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment