அரசு பி.எட். கல்லூரிகளில் விதிமீறி பேராசிரியர்கள் நியமனமா? - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Thursday, August 27, 2020

அரசு பி.எட். கல்லூரிகளில் விதிமீறி பேராசிரியர்கள் நியமனமா?

 அரசு பி.எட். கல்லூரிகளில் விதிமீறி பேராசிரியர்கள் நியமனமா?


தமிழ்நாட்டில் அரசு பி.எட். கல்லூரிகளில் விதிகளை மீறி பேராசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அரசு கல்லூரிகளின் இணையதளத்தில் பேராசிரியர்கள் தகுதி குறித்து முரண்பாடுகளான தகவல்கள் இருப்பதால் சர்ச்சை எழுந்துள்ளது.

 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பணிபுரிய வேண்டிய ஆசிரியர்கள் கல்வியியல் கல்லூரிகளில் நியமிக்கப்பட்டுள்ளதாக கல்வியாளர்கள் தெரிவித்துள்ளனர். ஆகவே இதுகுறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

 இதுபற்றி கல்வியாளர் ஒருவர் தெரிவித்ததாவது, பி.எட். கல்லூரிகளில் ஆசிரியராக பணியாற்ற எம்.எட். மட்டுமின்றி நெட் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இல்லையெனில் பி.எச்.டி. படிப்பையும் முடித்திருக்க வேண்டும்.

அவ்வாறு இருந்தால் மட்டுமே ஆசிரியராக பி.எட். கல்லூரிகளில் பணியாற்ற முடியும். ஆனால் தற்போது கலை அறிவியல் கல்லூரிகளில் பணியாற்றி வந்தவர்கள் எம்.எட். படிப்பை மட்டுமே வைத்துக்கொண்டு பி.எட். கல்லூரிகளில் விதிகளை மீறி நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதில் பல்வேறு முறைகேடு நடந்துள்ளது என குறிப்பிட்டுள்ளார். 

ஆனால் கல்லூரி கல்வி இயக்ககமோ, உயர்மட்ட குழுவின் நிபந்தனைகளுக்கு உட்பட்டே பேராசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டிருப்பதால் முறைகேடு ஏதும் இல்லை என்று விளக்கமளித்துள்ளது. 

தமிழகத்தில் உள்ள 3 அரசு பி.எட். கல்லூரிகளில் போதிய பேராசிரியர்கள் இல்லாததால் அங்கீகாரத்தை ரத்து செய்வது குறித்து தேசிய ஆசிரியர் கல்வி குழுமம் நோட்டீஸ் அனுப்பியிருப்பது குறிப்பிடத்தக்கது

2 comments:

  1. ஒருவர், முனைவர் பட்டம் பெற்றிருந்தாலும், நெட் தகுதி பெற்றிருந்தால் மட்டும் கற்பிக்கும் தகுதி வந்து விடும் என்பது ஏற்புடையதல்ல. மாணாக்கர்களின், சூழ்நிலையினை புரிந்து கொண்டு, அவர்களின் முந்நைய தகுதியினையும் கருத்தில் கொண்டு, தற்போதேய பாடத்தினை, அவர்களுக்கு புரியும்படி யார் நடத்துகிறார்களோ அவர்களே நல்லாசிரியர். அதுக்கு பி எட், எம் எட ஒரு வழிகாட்டி. தமிழில் சரியாக எழுத இயலாது இருக்கும் பல முனைவர்கள் உண்டு. வேண்டுமானால் அனைத்து தமிழ் முனைவர்களுக்கும் ஒரு தகுதிதேர்வு நடத்த ஏற்பாடு செய்யுங்கள் உண்மை தெரியவரும். ஆங்கில ஒலிகள் குறித்து அறியாதோரும் ஆங்கில முனைவர்களாக உள்ளனர். எனவே ஆசிரியர்களுக்கு ஆசிரியராக இருக்க பி எட், எம் எட் வழிகாட்டுதல்கள் பெற்ற அறிஞர்கள் கண்டிப்பாக வேண்டும். முனைவர் பட்டம், நெட் தகுதி அவசியம் இல்லை. அவைகள் அறிவின் அளவுகோள்தான். கற்பிக்கும் கலைக்கான அடையாளம் அல்ல. மாற்றுக்கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. துரை. மணிகண்டன். 7010960982.

    ReplyDelete
  2. நான் அனுப்பும் கருத்துகளின் பின்னூட்டத்தினை நான் எவ்வாறு அறிவேன்? வழிமுறைகளை தெரிவிக்கவும். நன்றி.

    ReplyDelete