ஆன்லைன் மூலம் கல்வி :குழந்தைகள் உரிமை அமைப்பான ‘கிரை நடத்திய ஆய்வில் தெரிவித்த கருத்துக்கள்
கரோனா பாதிப்பு காலத்தில் மாணவர்கள் ஆன்லைன் மூலம் கல்வி கற்க வசதியாக ஸ்மார்ட்போன் அல்லது இன்டர்நெட் வசதி பெற்றுள்ளனரா என்பது தொடர்பாக குழந்தைகள் உரிமை அமைப்பான ‘கிரை’ கடந்த மே, ஜூன் மாதங்களில் தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா ஆகிய 4 மாநிலங்களில் 5,987 பேரிடம் ஆய்வு நடத்தியது.
அதில் 94 சதவீத மாணவர்களிடம் இன்டர்நெட் இணைப்போ அல்லது ஸ்மார்ட்போன்களோ இல்லை எனத் தெரிய வந்துள்ளது.
11 முதல் 18 வயதுக்கு உட்பட்ட மாணவர்களுக்கு இன்டர்நெட் இணைப்பு இருக்கிறதா என்ற உண்மையைக் கண்டறியும் நோக்கில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது.
கர்நாடகாவில் 1,445 பேரிடம் நடத்தப்பட்ட ஆய்வில் 9 சதவீதத்தினரிடமும், தமிழகத்தில் 1,740 பேரிடம் நடத்தப்பட்ட ஆய்வில் 3 சதவீதத்தினரிடமும் ஸ்மார்ட்போன்கள் இருப்பது தெரிய வந்துள்ளது.
இதில் 95 சதவீத பேரின் ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்துக்கும் குறைவாக உள்ளது ஆய்வில் தெரிய வந்துள்ளது. குறைந்த வருமானம் மட்டுமே உள்ளதால் அவர்களுக்கு ஸ்மார்ட்போன் என்பது ஒரு ஆடம்பர பொருளாகவே இருப்பதாகவும் ஆய்வில் தெரிய வந்துள்ளது
No comments:
Post a Comment