போட்டித்தேர்வுகளுக்கான கட்டணமில்லா ஆன்லைன் பயிற்சி: வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை அறிவிப்பு - Minnal Kalvi Seithi

Breaking

Wednesday, August 19, 2020

போட்டித்தேர்வுகளுக்கான கட்டணமில்லா ஆன்லைன் பயிற்சி: வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை அறிவிப்பு

 போட்டித்தேர்வுகளுக்கான கட்டணமில்லா ஆன்லைன் பயிற்சி: வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை அறிவிப்பு

ஸ்டாஃப் செலக்‌ஷன் கமிஷன், வங்கி போட்டித் தேர்வுகளுக்கு ஆன்லைன் மூலம் பயிற்சி அளிக்கப்படுவதாகவும் தேர்வர்கள் கொடுக்கப்பட்டுள்ள இணைய லிங்க் வழியாக விண்ணப்பிக்கலாம் என வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை அறிவித்துள்ளது.


வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு:


“சென்னை -32 கிண்டியில் இயங்கி வரும் மாநில தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் இதுவரை போட்டித் தேர்வுகளுக்கான நேரடி இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. ‘‘Staff Selection Commission‘ (Combined Graduate Level)மற்றும் IBPS PO தேர்வுகளுக்கான கட்டணமில்லா Online பயிற்சி வகுப்புகளை வாரந்தோறும் திங்கள் முதல் வெள்ளி வரை வரும் ஆகஸ்டு 24 முதல் நடத்திட உத்தேசிக்கப்பட்டுள்ளது.


இவ்வகுப்புகளில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் கீழே அளிக்கப்பட்டுள்ள Online Link வாயிலாக பதிவு செய்யுமாறு மாநில தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் முதன்மை செயல் அலுவலர் மற்றும் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை இயக்குநர் விஷ்ணு, தெரிவித்துள்ளார்”.

Online Link

No comments:

Post a Comment